2 மணி நிலவரம் 14/03/2017 {}{}{} தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2 மணி நிலவரம் 14/03/2017 {}{}{} தமிழ் இணைய செய்திகள்

*விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருவள்ளுவர் காலனியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் போது வெடி விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் படுகாயம்.*

*சசிகலா தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் அணி பதில்*

*61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன்*

*மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை விவகாரம் குறித்து தெற்கு டெல்லி காவல்  துணை ஆணையர் விளக்கம்.*

*5 மாதங்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தார், அவரது பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்.*

*முத்துக்கிருஷ்ணன் அறையை முழுவதுமாக சோதனை செய்தோம், அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்.*

*தற்கொலை தொடர்பான குறிப்புகள் எதுவும் மாணவர் முத்துகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய அறையில் இல்லை.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*மனோகர் பாரிக்கர் பதவியேற்புக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.*

🔴*கோவா மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு*

*பாதுகாப்புத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஏற்றார் அருண்ஜெட்லி

*ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது தமிழக அரசு விசாரித்து வருகிறது: மத்திய அமைச்சர் அனந்தகுமார்.*

*ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால் மத்திய அரசால் தற்போது எதுவும் செய்ய முடியாது:  மத்திய அமைச்சர் அனந்தகுமார்.*

*ஏன் ஒபிஎஸ் அணியில் இணைந்தேன்?*

திலகவதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

35 ஆண்டு காலம் போலீஸ் துறையில் பணியாற்றி மக்கள் துயரங்களை தீர்த்து நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கி இருக்கிறேன். ஓய்வு பெற்ற பின்னரும் மக்கள் துயரங்களை துடைப்பதற்காக சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இருக்க வேண்டும் என்பதால், எந்த கட்சியில் சேரலாம் என்று குழப்பத்தில் இருந்தேன். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, பேசிய வார்த்தைகளும், அவருடைய துணிச்சலும் என்னை கவர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குறுகிய கால ஆட்சியை திறம்பட அவர் ஆற்றி இருந்ததால், ஏற்கனவே அவர் மீது மரியாதையும், அபிப்பிராயமும் இருந்தது. எனவே அவரது தலைமையை ஏற்று கட்சியில் இணைந்துள்ளேன். நாளை தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆள்வார். மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

*🔴ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த பின், ஆறே மாதத்தில் பொதுத்தேர்தல் வரும் - திமுக துரைமுருகன்  பேச்சு!*

*🔴கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா வருகிற 15ம் தேதி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.*

       
     

📝முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி_*

டெல்லி: டெல்லியில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது செய்து அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாணவன் முத்துக்கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்த்த இரங்கல் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று வழங்கினார்.

📝ரூ.3 கோடி மோசடி புகாரில் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை_*

மதுரை: ரூ.3 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரூ.3 கோடி வாங்கிவிட்டு மோசடி செய்ததாக விஸ்வநாதன் மீது அதிமுக நிர்வாகி சபாபதி புகார் தெரிவித்திருந்தார். சபாபதி புகாரை ஏற்று திண்டுக்கல் வடக்கு போலீஸ் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்தது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📝டெல்லியில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்தில் தீவிர விசாரணை தேவை: தமிழிசை_*

சென்னை: டெல்லியில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்தில் தீவிர விசாரணை தேவை என்று தமிழிசை கூறியுள்ளார். டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

***குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை இல்லை என புகார்: திருவண்ணாமலை, மேலூரில் அமைச்சர்களை முற்றுகையிட்ட பெண்கள்_*

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சரை பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு ஏரியில் நடைபெற்ற குடிமராமத்து பணி நிகழ்ச்சியில் அமைச்சர் சே.கு.ராமசந்திரன் பங்கேற்றார். இதற்காக அவர் மேடைக்கு வ்நதபோது ஐத்தம்பாளையத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி அவரை முற்றுகையிட முயன்றனர். காவல்த்துறையினர் அவர்களை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்களிடமிருந்து புகார் மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், 10 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதேபோன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அட்டப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை, பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குப்படும் எனக்கூறி அவர்களை சமாதானப்படுத்திவிட்டு அமைச்சரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார்.

       
       

[][][]சங்கரலிங்கபுரத்தில் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து சிறுவன் பலி_*

விருதுநகர்: சங்கரலிங்கபுரத்தில் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மின்கசிவு ஏற்பட்டதில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து 6 ம் வகுப்பு மணவர் தயாநிதி இறந்தார்.

₹₹₹₹ரூ.5000 லஞ்சம் வாங்கிய புகாரில் தலைமை காவலர் கைது_*

தஞ்சை: ரூ.5000 லஞ்சம் வாங்கிய புகாரில் மதுக்கூர் காவல்நிலையை தலைமை காவலர் கைது செய்யப்பட்டார். தலைமைக் காவலர் விஜயகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

*₹₹₹₹தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம்: ராகுல் காந்தி_*

டெல்லி: தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிரியசரிவு ஏற்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here