பிற்பகல் 2.00 மணி செய்திகள் 05/03/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிற்பகல் 2.00 மணி செய்திகள் 05/03/2017

    தமிழ் இணைய செய்திகள்
            05/03/2017

  பிற்பகல் 2.00 மணி செய்திகள்
 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔵 புதிய கட்சி*

*சசிகலா புஷ்பா எம்.பி., தனிக் கட்சி தொடங்குகிறார்*

*மார்ச் 26-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் சசிகலா புஷ்பா*

*🔮🔮 மீனவர்கள் போராட்டம்*

*வரும் 11-ந்தேதி பாம்பனில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.*

*இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கவேண்டும், இல்லாவிட்டால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்- ராமேஸ்வரம் மீனவர்கள்*

*🚨🚨 டிஜிபி மரணம்*

*மறைந்த தமிழக கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்*

*🔴🔵 தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சர்*

*இணையமைச்சராகிறார் இல.கணேசன்*

*#அமைச்சரவையில் மாற்றம்*

*விரைவில் ...*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

🇮🇳  *சென்னையில் போராட்டத்தை தடுக்க போலீஸ் குவிப்பு. சென்னை அண்ணாசாலையில் மாணவர்கள் திரண்டனர்*

*தனுஷ் ஒரு பார்ட்டியில் குடிபோதையில் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடுகிறார். அவர் அருகில் நடிகைகள் பூனம் பஜ்வா, தமன்னா ஆகியோர் மது அருந்தி ஆடுகிறார்கள்.இந்த வீடியோவை வெளியிட்டு, #Dhanush & #Tamannaah என்னம்மா இப்படி பானிரிங்கலேமா #SuchiLeaks என தெரிவித்துள்ளார்.சுசித்ரா ட்விட்டரில் பிரபலங்களின் சர்ச்சைக்குறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முதலில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டார்.தனுஷ், அமலா பால் லீலைகள், பாடகி சின்மயி- அனிருத் லீலை வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்*

♈*8வது முறையாக திருடும்போது சிக்கிய திருடன்-ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி பேரூராட்சி சங்கு நகரை சேர்ந்தவர் ஜோன்ஸ். இவர் ஈரோடு இரயில்வே நடைமேடை எண்-3  இல், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் மாலை, 5:40 மணிக்கு மும்பை - நாகர்கோவில் செல்லும் விரைவு இரயில் வந்தது. அப்போது, ஜோன்ஸ் உணவுப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தன்னுடைய 9,500 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை கடையில் சார்ஜ் போட்டிருந்தார். அதை நின்றுகொண்டிருந்த ஒருவர் எடுத்துச் செல்வதை, அதே  கடையில் பணிபுரியும் இன்னொரு விற்பனையாளர்கள் பார்த்துள்ளார்.இதையடுத்து, மொபைல்போன் திருடிய ஆளைப் பிடித்து, ஈரோடு இரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த மோகன்(வயது-49), என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்தது.மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரானையில், மோகன், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட இரயில்வே ஸ்டேஷன்களில் ஏற்கனவே ஏழுமுறை மொபைல்போன் திருடியுள்ளார் என்பதும், இப்போது எட்டாவது முறையாக திருடும்போது கையும், களவுமாக சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்*

*படிக்கச் சொன்னதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை-நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலையை அடுத்த எட்டிக்காம்பாளையம் பஞ்சாயத்து சீராப்பள்ளி*

*சிறுவன் மரணம்; மருத்துவமனை மீது வழக்கு. சேலம் உடையப்பா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமெரிக்க-ஐரோப்பிய மாற்றுமுறை மருத்துவம் என்ற பெயரில் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கோபிஸின் பெற்றோர் தகவல் அறிந்தனர்.இதையடுத்து நேற்று சிறுவனை சிகிச்சைக்காக அங்கு சேர்த்தனர். சிகிச்சையின்போது செவிலியர்கள் சிறுவன் கோபிஸ்க்கு ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவன் அசைவின்றி இருப்பதைக் கண்ட பெற்றோர், சிறுவனின் நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டுள்ளனர்.உடனே சிறுவனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது. அங்கு சிறுவனை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், மருந்துகளையும் கேட்டறிந்த அரசு மருத்துவர், மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு அளவுக்கு அதிகமான மருந்தைச் செலுத்துவது தவறு என்று செவிலியரை கண்டித்தாகக் கூறப்படுகிறது.இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது மகனின் இறப்புக்கு தனியார் மருத்துவமனைதான் காரணம் எனக் கூறி பெற்றோர், உறவினர் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர் சிறுவனின் தந்தை அருள்முருகன் அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீஸார் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப் பதிந்தனர்*

*சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினத்தையொட்டி சென்னையில் தேசிய பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயா (தமிழ்நாடு, மதுரை), நிஷா குலர் (கர்நாடகா), சங்கீதா, மகாதேவி, சுஜில், (மராட்டியம்), அலமேலு (ஆந்திரா), சந்திரலேகா (கேரளா) ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது ஜெயா கூறும்போது, ‘கடந்த 2000–ம் ஆண்டு ஆண்டு பாலியல் தொழிலாளர்களுடன் நான் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் அவர்களோடு என்னையும் கைது செய்துவிட்டனர். அதன்பின்னர் நானும் பாலியல் தொழிலில் ஈடுபட தொடங்கி விட்டேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த தொழில் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து என்னுடைய சகோதரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 35 சிறுமிகளை மீட்டு அவர்களுடைய குடும்பத்தில் பத்திரமாக ஒப்படைத்து இருக்கிறேன். தற்போது போலீசார், ரவுடிகள் மூலம் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. எனவே இந்த தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அனைவரும் கூட்டாக கூறும்போது, ‘புள்ளி விவர ஆய்வின்படி, இந்தியாவில் 35 லட்சம் ஆண், பெண், திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 75 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.சுகாதாரத்துறை பாலியல் தொழிலை அங்கீகரிக்கிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அரசு துறைகளில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.’ என்றனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது*

*இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சுசிலீக்ஸ் தொடர்பாக தனுஷிடம் பேசினேன். அவர் ரஜினிகாந்த் போன்று சிரித்துவிட்டு இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட், வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார் என தெரிவித்துள்ளார்*

🌴 *தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் இளைஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்*

*நடிகர் கமல்ஹாசன் இன்று ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*

*கோரிக்களை வலியுறுத்தி தென் மாநில வக்கீல்கள் போராட கட்ஜூ அழைப்பு. நாளை முதல் கையில் வெள்ளை பேண்ட் அணிந்து போராடுங்கள்- கட்ஜூ. 4 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட வேண்டும்- கட்ஜூ. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜை முதல்வராக்க வேண்டும். ஹைகோர்ட்டுகளில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்*

*ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நடிகை லதா*

*ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்குள் சுருண்டது. பெங்களுருவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 71.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளை வரை 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. ரென்ஷா 40 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 2 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்*

*ஜம்மு-காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் ராணுவ முகாம் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது*

♈ *பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி உயர்த்தியுள்ள தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று வைகோ கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியது பகல் கொள்ளையை விட பயங்கடமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்*

*பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய தமிழக அரசுக்கு வணிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வழிவகுக்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வாட் வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளனர்*

🌴 *கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். திரு.வி.க நகர் மற்றும் பெரியார் நகரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்*

🌴 *சென்னை கோபாலபுரம் வங்கிக் கொள்ளை முயற்சி தொடர்பாக 30 வடநாட்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நேற்று கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது*

🇮🇳 *பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.bblogspot.com
♈ *நெடுவாசல் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது*

🌴 *பெண் போலீசுடன் தகாத உறவு - இரு போலீசாரிடையே கைகலப்பு: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு-திருவள்ளுர் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ளது கோகினூர் அவன்யூ*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here