🍎டெல்லியில் தொழிலாளர்கள் ஊதியம் 37 சதவிகிதம் உயர்வு: ஆம் ஆத்மி அரசின் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் ஏற்பு
🌻டெல்லியில் தொழிலாளர்களின் ஊதியம் எதிர்பாராத அளவாக 37 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஆம் ஆத்மி அரசின் பரிந்துரையை ஏற்ற அம்மாநில துணைநிலை ஆளுநர் அணில் பைஜல், மார்ச் 6-ல் அதன் அறிவிப்பை வெளியிடுகிறார்.
🌻இது குறித்து நேற்று டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ''எங்கள் பரிந்துரையை ஏற்ற துணைநிலை ஆளுநருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் வெளியிடும் அறிவிப்பிற்கு பின் அனைத்து முதலாளிகளும் தங்கள் தொழிலாளிகளுக்கான ஊதியத்தை அரசு அறிவித்தபடி அமல்படுத்த வேண்டும்.
🌻இது சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் நடந்திடாத சாதனை ஆகும். இதன்மூலம், தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளுடன் முறையாகப் பங்கீட்டுக் கொள்ள வேண்டுகிறோம். அரசு அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும் எனவும் கோருகிறோம்'' எனத் தெரிவித்தார்.
🌻டெல்லியில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த புதிதில் ஆம் ஆத்மி அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 50 சதவிகிதம் உயர்த்தி அமைச்சரவையில் முடிவு எடுத்தது. இதற்கான பரிந்துரையை அப்போது இருந்த துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங் ஏற்கவில்லை. இதனால், அதன் மீது 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து கேஜ்ரிவால் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தார். இவர்கள் பரிந்துரைத்த 37 சதவிகிதத்தை புதிய ஆளுநரான பைஜல் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
🌻இதன்படி, டெல்லியில் திறமை அற்ற தொழிலாளர்களின் மாத ஊதியம்9,724-ல் இருந்து 13,350 ரூபாயாக உயரும். பாதி திறமை படைத்தவர்களின் ஊதியம்10,764-ல் இருந்து 14,698 மற்றும் முழுத்திறமை கொண்டவர்களுக்கு11,830-ல் இருந்து 16,182 ரூபாயாக உயர உள்ளது.
🍊சட்டத் திருத்தம்-கண்காணிப்பு
🌻இந்த ஊதிய உயர்வு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆம் ஆத்மி அரசு மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைக்க உள்ளது. இவர்களிடம் நேரிலும், இணையதளங்கள் மூலமாகவும் தொழிலாளர்கள் புகார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
🌻இதில் விதிகளை மீறும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் டெல்லி மற்றும் மத்திய அரசின் தொழிலாளர்நலச் சட்டங்களில் சட்டத் திருத்தமும் சமீபத்தில் செய்யப்பட்டுள்ளன
🌻இதில், விதிகளை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டனை என்றிருந்தது மாற்றப்பட்டு விட்டது. புதிய சட்டத்தில் ரூ.50,000 மற்றும் மூன்று வருடம் கடுமையான சிறைத்தண்டணையும் அளிக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக