🔴🔵🔴🔵🔴🔵🔴🔵
தமிழ் இணைய செய்திகள்
16/03/2017
தமிழக பட்ஜெட் ஒரு பார்வை -2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📝📝📝📝📝📝📝📝📝📝
*** *நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை - ஸ்டாலின்..!*
****நிதிநிலை அறிக்கை : பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் - ஸ்டாலின்.....!*
** அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் இல்லை.
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
* கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
* தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
* உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
* ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி துறைக்கு ரூ.116 கோடி
* போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
* வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
* நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்
* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.
* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார.
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*"முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் நிதியமைச்சர்"*
*"பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற பட்ஜெட்"*
-பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
கடந்த *2015-2016*ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு *30.5*லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக அரசின் ஆவின் நிறுவனம்
*2016-2017*ம் நிதியாண்டில் சுமார் 41லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது உண்மைக்கு புறம்பான *"முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்"*
ஏனெனில் கடந்த 2015-2016ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 30.5லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாகவும், தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தோடு போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை ஓரளவுக்கு உயர்த்தி கொடுத்து வருவதாலும், தனியார் பால் நிறுவனங்களோடு வணிகச் சந்தையில் ஈடு கொடுக்க முடியாததாலும் ஆவின் நிறுவனத்திற்கு வரக் கூடிய பாலின் கொள்முதல் நாளொன்றுக்கு சுமார் 24.5லட்சம் லிட்டராக குறைந்திருக்கிறது.
இந்த நிலையில் உண்மைக்கு புறம்பான தகவலை பட்ஜெட்டில் கொடுத்து பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சருக்கு *தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்* சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
*சு.ஆ.பொன்னுசாமி*
(நிறுவனர் & மாநில தலைவர்)
💰 *உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்ட செல்ல சிறப்பு வழித் தடம்.*
💰 *தருமபுரியில் ஒரு உணவுப் பொருள் குழுமம் வழங்கப்படும்.*
💰 *மூலதன மானியம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ.1,950 கோடி ஒதுக்கீடு.*
💰 *காஞ்சிபுரம் மற்றும் கரூரில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்.*
💰 *ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள்கள் குழுமம் அமைக்கப்படும்.*
💰 *இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு.*
💰 *சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.*
💰 *தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.*
💰 *கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.*
💰 *காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்*
💰 *1,000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.*
💰 *நீர்வளத்துறைக்கு ரூ.4,971 கோடி ஒதுக்கீடு.*
💰 *அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு.*
💰 *மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை விரிவு.*
💰 *நிதிப்பற்றாக்குறை ரூ.2.79 சதவிகிதமாக இருக்கும்.*
💰 *107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.*
💰 *உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.*
💰 *உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.*
💰 *சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.*
💰 *100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.*
💰 *ஆண்டுதோறும் தனிநபர் மின்சார பயனீட்டு அளவு அதிகரித்து வருகிறது.*
💰 *நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி.*
💰 *சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.*
💰 *ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.*
💰 *குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.*
💰 *சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.*
💰 *நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.*
💰 *தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.*
💰 *உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.*
[3/16, 1:52 PM] +91 93676 29462: 💰 *தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24.28 லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.*
💰 *தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.*
💰 *நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.*
💰 *முதலீடு ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1,295 கோடி.*
💰 *வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் புனரமைக்கப்படும்.*
💰 *மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ,1,001 கோடி ஒதுக்கீடு.*
💰 *சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.403 கோடி ஒதுக்கீடு.*
💰 *ஊரக வளர்ச்சிக்கு ரூ. 16,665 கோடி ஒதுக்கீடு.*
💰 *தமிழக மக்கள் தொகையில் 48% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.*
💰 *அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ. 1,400 கோடி நிதி.*
💰 *இலவச, வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி*
💰 *உதகையில் ரூ. 5 கோடி செலவில் நகரக விற்பனை கண்காட்சித் திடல்.*
💰 *பிரதம மந்திரி கிராமப்புற சாலைத்திட்டத்திற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.*
💰 *தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்.*
💰 *திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி.*
💰 *கைத்தறி துறைக்கு ரூ. 1,230 கோடி, கதர் துறைக்கு ரூ.194 கோடி*
*விளம்பர பாணியில் பட்ஜெட்டை கடகடவென வாசித்த ஜெயக்குமார்; பேரவையில் சிரிப்பலை*
சென்னை: 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து சரியாக 2 மணி நேரமாக உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் திடீரென உரையை அதி வேகமாக வாசித்தார்.
பேரவை உறுப்பினர்களும், தொலைக்காட்சி வாயிலாக பட்ஜெட் உரையை பார்த்துக் கொண்டிருந்த மக்களும் கூட சற்று திகைத்துப் போயினர்.
பட்ஜெட் அறிவிப்புகளை வேகமாக வாசித்துக் கொண்டே போன ஜெயக்குமார்... பிறகு இப்படி வாசிக்கவா அல்லது மெதுவாக வாசிக்கவா என்று கேட்டார். அதற்கு சில உறுப்பினர்கள் வேகமாக வாசியுங்கள் என்றும், பலர் மெதுவாக வாசியுங்கள் என்றும் கூறினர்.
இதைக் கேட்ட ஜெயக்குமார், சற்று சுவாரஸ்யமாக்கவே இவ்வாறு செய்தேன் என்று பதில் அளித்தார். இதனால், கடந்த 2 மணி நேரமாக தான் வாசித்த பட்ஜெட் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை சற்று நகைச்சுவை ஊட்டி சிரிக்கவும் செய்தார். இதனால் எப்பவும் கூச்சலும் குழப்பமும் நிலவும் பேரவையில் சிரிப்பலையும் உண்டானது.
பிறகு தனது பாணியில் பட்ஜெட்டை உரையை மீண்டும் தொடங்கினார்.
*சட்டப்பேரவை ஒத்திவைப்பு.*
*தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை கூடும் என சபாநாயகர் அறிவிப்பு.*
*நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக