🙈🙉🙊ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலான சுமூக உறவை கெடுக்கும் விதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியைக்கு தண்டனையாக 2400 சதுரஅடி பரப்பளவில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ⚖⚖⚖⚖⚖⚖⚖ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🙈🙉🙊ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலான சுமூக உறவை கெடுக்கும் விதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியைக்கு தண்டனையாக 2400 சதுரஅடி பரப்பளவில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ⚖⚖⚖⚖⚖⚖⚖

ஆசிரியர்கள்,மாணவர்கள் மத்தியிலான சுமூக உறவை கெடுக்கும் விதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியைக்கு தண்டனையாக 2400 சதுர அடி பரப்பளவில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பி.முகேந்திரன், இ.சண்முகநாதன், சுந்தரமூர்த்தி. இவர்கள் மீது பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் அளித்தார். இந்தப்புகாரையடுத்து மூவரும் நாகப்பட்டிணம் மாவட்டத்துக்கு கடந்த 2016 செப்டம்பர் 8ஆம் தேதி இடமாறுதல் செய்யப்பட்டனர்.

இந்த இடமாறுதலை ரத்து செய்யக்கோரி முகேந்திரன்,சண்முகநாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதில்,”நாங்கள் தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். சங்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறோம். பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா, அவரது மகன், மகளுக்கு போலி ஜாதி சான்றிதழ் வாங்கினார். இதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். இதனால் தலைமை ஆசிரியை எங்களை பழிவாங்க பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் புகாரை வாங்கி எங்களை இடமாறுதல் செய்து வைத்துள்ளார். இதனால் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் மீது பாலியல் புகார் அளித்த இளம் பெண்ணை நேரில் அழைத்து விசாரித்த நீதிபதி,” பள்ளியின் முன்னாள் மாணவி, எஸ்சி, எஸ்டி, பிசி கல்வி கழகத்தின் மாவட்டச் செயலர் இளம்பருதி ஆகியோரின் மனுக்களின் அடிப்படையில் மனுதாரர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் புகார் அளித்ததை மாணவி மறுத்துள்ளார். தலைமை ஆசிரியை பிரேமா தன்னை அழைத்து ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளிக்காவிட்டால், இதே பள்ளியில் பயிலும் எனது சகோதரியை தோல்வி அடையச் செய்வதாக மிரட்டினார். அதனால் அவர் எழுதி வைத்திருந்த மனுவில் கையெழுத்திட்டேன். இளம்பரிதி புகாரை பொருத்தவரை அப்படி ஒரு நபரே இல்லாதது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மனுதாரர்கள் இடமாறுதலை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால் மனுதாரர்கள் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்களை அதே பள்ளியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இந்த வழக்கில் தலைமை ஆசிரியை பிரேமா தன்னுடைய செயலால் ஆசிரியர்கள்,மாணவர்கள் மத்தியிலான சுமூக உறவை கெடுக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். இதற்காக தலைமை ஆசிரியை பிரேமா, 2400 சதுர அடி பரப்பளவில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. பள்ளியின் அருகே எந்த இடத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதை 2 வாரத்தில் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அந்தப்பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான செலவை பிரேமா வழங்க வேண்டும். கருவேல மரம் அகற்றும் பணியை மாவட்ட நீதிபதி நேரில் பார்வையிட்டு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்ற பிரேமா தவறும்பட்சத்தில்,அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள கருவேல மரங்களை அரசே அகற்றிவிட்ட அதற்கான செலவை பிரேமாவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் கல்வி இணை இயக்குனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனஉத்தரவிட்டார்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here