தமிழ் இணைய செய்திகள் /26/03/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள் /26/03/2017

நெல்லை வி்ஞ்ஞானிக்கு அக்னி விருது 🏆

நாட்டின் பாதுகாப்புக்காக புதிய ரேடார் அமைத்த நெல்லை வி்ஞ்ஞானி ஞான மைக்கேல் பிரகாசம் அவர்களுக்கு அக்னி விருது🏆 வழங்கப்பட்டுள்ளது.தமிழ் இணைய செய்திகள்  அவரோடு பணியாற்றிய 30 வி்ஞ்ஞானிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக் ரேடார் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர் கடந்த 5⃣ ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்கான ரேடாரை வடிவமைத்து வந்தனர். இதனை பாதுகாப்பு துறை சோதனை செய்து அதன் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்தது. 🇮🇳இந்திய தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆருத்ரா ரேடார் கடந்த குடியரசு தினத்தில் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடந்த விழாவில் நாட்டின் பாதுகாப்புக்கான ரேடாரை அமைத்த ஞான மைக்கேல் பிரகாசத்திற்கு அக்னி விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கி பாராட்டினார்👏. இவரோடு பணியாற்றிய 30 சிறந்த வி்ஞ்ஞானிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ரேடார் மூலம் இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கி பாராட்டினார்👏 .
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.con

சித்தப்பாவை ஆதரிக்காத 🎼யுவன் 😱

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனை ஆதரிக்கவில்லை என 🎼இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்😳. கங்கை அமரன் மற்றும் இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி. பாஸ்கரின் மகளும், பிரபல ஆடை வடிவமைப்பாளருமான 👗வாசுகி பாஸ்கர் ஆர்.கே. நகரில் கங்கை அமரனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு அதில் 🎼யுவனின் பெயரை குறிப்பிட்டிருந்தார். வாசுகியின் ட்வீட்டை பார்த்த யுவன் இதை நான் ஆதரிக்கவில்லை என்று ட்வீட்டினார். இதையடுத்து வாசுகி அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்😱. 
 
 
 

தமிழ் இணைய செய்திகள் சேவையை பெற
உங்கள் குரூப்பில் +918667670919 இந்த எண்ணை சேர்க்கவும்

ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு நாளை(27.3.2017) ✍ஒப்பந்தம் 😳

நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு நாளை (மார்ச் 27) ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதில் இந்தியாவில் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரி ஒருவர் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் 🔈, “இந்த திட்டத்திற்கு தமிழகம், அசாம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம். ஆனால் துரப்பன பணிகளை தொடங்குவதற்கு இந்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல. இதன் பிறகு அந்த நிறுவனங்கள் கனிமவளச் சுரங்கக் குத்தகை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுபாடு உட்பட சுமார் 30 வகையான அனுமதியை✍ பெறவேண்டும் . மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிடம் இந்த அனுமதியை பெறுவது ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் பேசி, அனுமதி பெறுவது நிறுவனத்தின் பணியாகும். இதற்கு மத்திய அரசு உதவி செய்யும். ஆனால் தமிழகத்தில் நிலவும் சூழலை பார்த்தால் அங்கு அரசியல் ரீதியாக அணுக வேண்டும் எனத் தோன்றுகிறது👍. ஒப்பந்தம் திட்டமிடப்பட்ட 31 இடங்களில், போராட்டம் காரணமாக நெடுவாசல் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டக் குழுவினர் கடந்த 22 ம் தேதி மத்திய அமைச்சருடன் நடத்திய சந்திப்புக்கு பிறகு நெடுவாசல் மீண்டும் ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்😱.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

173 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட அணை 😮

ஆந்திராவில் உள்ள ராயலசீமா மாவட்டங்களில் வறட்சியைப் போக்க கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில்📖 இடம் பெற்றுள்ளது 👏.  
  தமிழ் இணைய செய்திகள்
கோதாவரி நதியிலிருந்து சுமார் 3,000 கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுக்கவும் ராயலசீமா பகுதியின் வறட்சியைப் போக்கவும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அணையின் கட்டுமானப் பணி, வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டது. இதன் மூலம் போலாவரம் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவிலேயே மிகவும் வறண்ட பகுதியாகக் கருதப்படும் ராயலசீமாவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட அணையாக, பட்டிசீமா லிம்கா சாதனை புத்தகத்தில்📖 இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் நேற்று(25.03.2017) தெரிவித்தார்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here