தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*கண்ணகி சிலையிடம் விவசாயிகள் மனு.*
*சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்ணகிசிலையிடம் மனு அளித்தனர்.*
*உணவு வீணாக்கப்படுவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.*
*புகழாரம்:*
_மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் வங்கதேசத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். அந்நாட்டு மக்களுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும். பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மரணத்தை கண்டுபயப்படவில்லை. அவர்கள் நாட்டுக்காக வாழ்ந்து மரணமடைந்தனர். சத்தியாகிரக போராட்டத்தின் 100வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். காந்தி போராட்டத்தில் இது முக்கியமானது ஆகும்._
*புது இந்தியா:*
_125 கோடி மக்கள் புது இந்தியாவை விரும்புகின்றனர். புது இந்தியாவை உருவாக்க அனைவரும் உதவ வேண்டும். உங்கள் கனவை நனவாக்கும் வகையில் புது இந்தியா அமையும் . புது இந்தியாவை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்._
*போர் வீரனாக...:*
_ரூபாய் நோட்டு வாபசை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலை ஒழிக்க உதவும். 1.5 கோடி மக்கள் பீம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். இதனை நோக்கி மக்கள் வருகின்றனர். கறுப்பு பணம் மற்றும் ஊழலை மக்கள் நிராகரித்து விட்டனர். கறுப்பு பணத்திற்கு எதிராக ஒவ்வொரு மக்களும் வீரர் போல் செயல்பட வேண்டும்._
*கவலை:*
_தூய்மைப்பணி ஒரு பழக்கவழக்கமாக மாறிவிட்டது. உணவு வீணாக்கப்படுவது எதிர்பாராதது. வீணாகும் உணவை, பலர் தொழில்நுட்பம் கொண்டு மற்றவர்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர். உணவு வீணடிக்கப்படுவது கவலையளிக்கிறது. இது சமூகத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்._தமிழ் இணைய செய்திகள்
*🔴🔴முதலமைச்சர் பழனிசாமி, இடைத்தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
*கை, கால்களை உடைக்கத் தயங்க மாட்டேன் என்று பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!*
*பசுக்களை வதைப்பவர்களின் கை, கால்களை உடைக்கத் தயங்க மாட்டேன் என உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.*தமிழ் இணைய செய்திகள்
_உத்தரப்பிரதேசத்தின் முஸாபர் நகரில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் நோக்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. விக்ரம் சைனி, பசுக்களை வதைப்பவர்களையும், பசுக்களை இறைச்சிக்காக வெட்டுபவர்களின் கை, கால்களை உடைக்கவும் தயங்க மாட்டேன் என உணர்ச்சிகரமாகப் பேசினார். அவரது இந்தப் பேச்சு, அங்கிருந்த மக்களை மட்டுமின்றி, மேடையில் அமர்ந்திருந்த பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது._
*🔴🔴ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டையில் வாக்கு சேகரிப்பின் போது ஒபிஎஸ் - தினகரன் ஆதரவாளர்கள் கடும் மோதல்! பதட்டம்!!*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக