41 பாடங்களை கைவிட சி.பி.எஸ்.இ முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

41 பாடங்களை கைவிட சி.பி.எஸ்.இ முடிவு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 41 பாடங்கள், வரும் கல்வி ஆண்டில் கைவிடப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பில், விருப்பப் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களுடன், இந்த கூடுதல் பாடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில், பல தொழில் பாடங்களுக்கு, போதிய வரவேற்பு இல்லாமல், ஒன்றிரண்டு மாணவர்களே படிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 41 படிப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதில், ஏழு விருப்பப் பாடம் மற்றும், 34 தொழிற்கல்வி பாடங்கள் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here