வருமானவரி சட்டத்தில் புதிய சட்டதிருத்தங்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வருமானவரி சட்டத்தில் புதிய சட்டதிருத்தங்கள்

'
    வரும் *01-04-2017*முதல், வருமான வரிச்சட்டத்தின் கீழ், சட்டப்பிரிவு 269STன் படி,நடைமுறைக்கு வரவுள்ளகட்டுப்பாடுகள்

குறித்த விளக்கம் கீழே...

*சட்டவிதி 269ST(a):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும்மேல், ஒரு நாளில், ஒரேநபரிடமிருந்து, ஒருவிற்பனைப்பட்டியலுக்கோ (அ) பலபட்டியல்களுக்கோரொக்கமாகப் பணம்பெற்றால், மேற்படிவிதியின் படிதண்டனைக்குரியபரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது*நீங்கள்*), ஒரு நாளில்,ஒரே நபரிடமிருந்து, ஒருவிற்பனைப்பட்டியலுக்கோ (sale bill)அல்லது பல விற்பனைப்பட்டியல்களுக்காகவோ,ரூ.3,25,000/-ரொக்கமாகப் பெற்றால்,தண்டம் (penalty)கட்டவேண்டும்.

*சட்டவிதி 269ST(b):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும்மேல்,   ஒரு  வி்ற்பனைப்பட்டியலுக்காக, ஒரேநபரிடமிருந்து, பலதவணைகளாக, பலநாட்களில், ரொக்கமாகப்பணம் பெற்றால்,மேற்படி விதியின் படிதண்டனைக்குரியபரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது*நீங்கள்*), ஒருவருக்குரூ.4,00,000/- க்கு ஒரேவிற்பனைப் பட்டியலாகப்போட்டு, ஒரு நாளுக்குஅதிகபட்சம் ரூ.10,000/-வீதம் பல தேதிகளில்,ரூ.4,00,000/- ரொக்கமாகப் பெற்றால்,தண்டம் (penalty)கட்டவேண்டும்.

*சட்டவிதி 269ST(c):*

ரூ.3 லட்சம் (அ) அதற்கும்மேல், பல பிரிவுகளில்பல்வேறு வகையிலானதொடர் விற்பனைப்பட்டியல்களுக்கு, ஒரேநபரிடமிருந்து, ஒரேதவணையாகவோஅல்லது பலதவணைகளாகவோ,ரொக்கமாகப் பணம்பெற்றால், மேற்படிவிதியின் படிதண்டனைக்குரியபரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*

ஒரு வணிகர் (அதாவது*நீங்கள்*), ஒரு நபருக்கு,ரூ.1,50,000/- ற்கு சேலை/துணி விற்பனைப்பட்டியலாகவும்,ரூ.1,30,000/-க்குதறிக்கூலிபட்டியலாகவும்,ரூ.1,20,000/- க்குதுணியில் கல் பதித்தகூலிப்  பட்டியலாகவும்போட்டு,மொத்தமாகவோஅல்லது பலதவணைகளாகவோரூ.4,00,000/- ஐயும்ரொக்கமாகப் பெற்றால்,தண்டம் (penalty)கட்டவேண்டும்.

இது அனைத்து வணிகப்பிரிவுகளுக்கும்பொருந்தும்.

*மிகமுக்கியகுறிப்பு*:

மேற்படி விதியின்படி,கட்டவேண்டியதண்டத்தொகைஎவ்வளவு தெரியுமா…?

100% (நூறு சதவிகிதம்)

அதாவது, நீங்கள்ரொக்கமாகப் பெற்றதொகை *முழுவதையும்*அப்படியே அரசுக்குசெலுத்திவிட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here