என் கணவரை தூண்டிவிட்டுள்ளனர் : தீபா அறிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

என் கணவரை தூண்டிவிட்டுள்ளனர் : தீபா அறிக்கை

தனிக்கட்சி தொடங்கவிருக்கிறேன் என தீபாவின் கணவர் மாதவன் அறிவித்துள்ளது தீபாவின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பின்னர் பத்திரிகையாளர்களைள சந்தித்த தீபாவின் கணவர் மாதவன், தனது மனைவி தொடங்கியிருப்பது ஒரு அமைப்பு என்றும், நான் தற்போது கட்சி தொடங்கவிருக்கிறேன் என பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



மேலும், தனது மனைவியை சுற்றி சதிகாரர்கள் இருப்பதாகவும், எனக்கும் எனது மனைவிக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா குடும்பத்தினர் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளித்து வந்தனர். இந்நிலையில், என் குடும்பத்தை பிரித்துவிட வேண்டும் என நினைக்கின்றனர்.

எனது கணவரை தூண்டி விட்டு என்னை தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய சதியில் ஈடுபட்டுள்ளனர். அவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி யிட கட்டாயப்படுத்தி இருக் கின்றனர்.

குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால், தேர்தலில் நான் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா, டிடிவி தினகரனின் தவறான வியூகம். யார் எதிர்த்து நின்றாலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here