ஏழைகள் வாய்ப்புகளை மட்டுமே விரும்புகிறார்கள் சலுகைகளை அல்ல என்று டெல்லியில் பாஜக கட்சி அலுவலகத்தில் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கட்சியின் பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் பாஜக கட்சி அலுவலகத்தில் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் தொடங்கியது
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை அமோக வெற்றி பெற வைத்ததற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் புதிய இந்தியா உருவாகி வருவதை காட்டுக்கின்றது.
அதிகவாக்குகள் பதிவான சூழலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது சிறப்பானது.
ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ச்சி என்பதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
நடுத்தர மக்களின் சுமை குறைய வேண்டும்,சுமையை குறைப்பதால் வாழ்க்கையில் முன்னேறுவர்.
தேர்தல் முடிவுகள் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி உள்ளது.
அதிகாரம் என்பது பதவியை பற்றியதல்ல,மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஏழைகள் வாய்ப்புகளை மட்டுமே விரும்புகிறார்கள் சலுகைகளை அல்ல.
மேலும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வகையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா.மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக