{}{} மாலை பதிப்பு {}{}
22/03/2017
தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட நிருபர்களிடம் அனைத்து பத்திரிக்கையாளர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார் சங்கர்...
*🔴🔴தங்கம் விலை கிடு கிடு உயர்வு!*
*சவரனுக்கு ₹336 உயர்ந்தது!*
*-தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்.பல ஆயிரக்கனக்கானோர் காலையில் கைதாகி மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
*🔴🔴சின்னம் முடக்கப்படவே அதிக வாய்ப்பு - நரேஷ் குப்தா, முன்னாள் மாநில தலைமை தேர்தல் ஆணையர்!*
*நெடுவாசல் போராட்டத்தைக் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது : போராட்டக்குழுவினர் தகவல்_*
*_வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் சரிவு _*
*என்னுடைய கவனத்திற்கு வராமல் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்கின்றேன்: இயக்குனர் சங்கர்_*
*_அதிமுக பொதுச்செயலாளராக இருக்க சசிகலாவுக்கு சட்டப்படி தடைவிதிக்கவில்லை : அரிமாசுந்தரம் வாதம்_*
*பி.எஸ்.எல்.4 ஆய்வகம் அமைக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு _*
📝உத்திர பிரதேசத்தில் அரசு அலுவலங்களில் புகைப்பொருட்கள் விற்க தடை: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு _*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📝ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்_*
*🔴🔴இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என மைத்ரேயன் உறுதி!*
🔴🔵 கர்நாடக மாஜி முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.,வில் இணைந்தார்
*🔴இரு தரப்பு வாதங்களில் ஒபிஎஸ் அணியினரின் வாதம் வலுவானதாக இருந்ததாக வட இந்திய ஊடகங்கள் கருத்து!*
*காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டவர்கள் சசிகலா தரப்புக்கு ஆதரவாக வாதிட்டதில் உள் அர்த்தம் இருப்பதாகவும் கருத்து!*
*ஒபிஎஸ் அணியினர் பக்கம் பாஜக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சின்னம் முடக்கப்பட்டாலோ ஒபிஎஸ் அணிக்கு வழங்கபட்டாலோ அதை பிரச்சினையாக்கி தேசிய அளவில் கொண்டு செல்ல சசிகலா தரப்பு முடிவு செய்து அதற்கு துணையாக காங்கிரஸ் தரப்பு ஆதரவு எனவும் கருத்து!*
*🔴🔴தே.ஆணையம் நாளை தனது முடிவை அறிவிக்கவே அதிக வாய்ப்பு!*
*இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என நம்புகிறோம் - பன்னீர்செல்வம் தரப்பு எம்.பி. மைத்ரேயன் பேட்டி.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴🔴"லவ் பண்ணினால்" எச்சரிக்கை!*
*காதலிகளுடன் ஊர் சுற்றும் இளைஞர்களை துரத்தி தூரத்தி கைது செய்யும் உத்திரபிரதேச காவல் துறை.*
*இன்று பல இடங்களில் பிடிபட்ட இளைஞர்களை அந்த இடத்திலேயே தோப்பு கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பியது போலீஸ்!*
*_🌴📝🌴ஒசூர் அருகே லாரி மோதி 3 பெண்கள் பலி_*
ஒசூர்: ஒசூர் அருகே சானமாவு என்ற இடத்தில் லாரி மோதி 3 பெண்கள் உயிரிழந்தனர். லாரி மற்றும் மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
*_🌴📝🌴ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை_*
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மரியாதையை செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,தங்கமணி ஆகியோரும் மரியாதையை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
*_🌴📝🌴மதுரை மாவட்டத்தில் 4,609 ஹெக்டர் பரப்பளவில் சீமை கருவை மரங்கள் அகற்றம்_*
மதுரை: மதுரை மாவட்டத்தில் 4,609 ஹெக்டர் பரப்பளவில் சீமை கருவை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் சீமை கருவை மரங்கள் அகற்றும் பணி ஆய்வுக்கு பின் ஆட்சியர் வீரராகவராவ் பேட்டியளித்துள்ளார். 80% சீமை கருவை மரங்கள் தனியார் இடங்களில் உள்ளதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல் தெரிவித்துள்ளது. சீமை கருவை மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🌴📝🌴இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவிப்பு_*
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்தது. முதல்நிலை வீரர்களாக விராட் கோலி, தோனி, அஸ்வின், முரளி விஜய், ரஹானே, புஜாரா, ஜடேஜா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆம் நிலை வீரர்களாக ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், லோகேஷ் ராகுல், புவனேஸ்வர்குமார், முகமது சமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விர்திமான் சாஹா, பும்ரா ஆகியோர் 2 ஆம் நிலை வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
*_🌴📝🌴இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்._*
சென்னை,
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகி வாதத்தை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று இரவு அல்லது நாளை காலை முடிவு அறிவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் டிடிவி தினகரன் கூறுகையில், “ தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குத்தான் ஒதுக்கும் என 100 சதவீதம் நம்புகிறோம். சின்னம் கிடைத்த பிறகே, ஆர்.கே. நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன். வேட்புமனு தாக்கல் செய்ய எந்தத் தடையும் எனக்கு இல்லை. ஆர்.கே.நகரில் நாளை மாலை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
*_சசிகுமார் கொலை வழக்கில் சையது அபுதாகிர் என்பவருக்கு 15 நாள் காவல்_*
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் சையது அபுதாகிர் என்பவர் கைது செய்யப்பட்டார். சையது அபுதாகிரை 15 நாள் காவலில் வைக்க கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*_பொதுமக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்_*
சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருக்கின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அனைவரும் நலமாக வாழ வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. புதிய மெகா குடிநீர் திட்டங்கள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை எனவும் ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.
*_முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டுச் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்வு: பிசிசிஐ_*
மும்பை: முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டுச் சம்பளத்தை ரூ.2 கோடியாக பிசிசிஐ உயர்த்தியுள்ளது. இதுவரை ஒரு கோடி ரூபாயாக இருந்த கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் தோனி, தற்போது கேப்டன் விராட் கோலி ஆண்டுச் சமபளமும் ரூ.2 கோடி ஆனது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக