[][][][] 3 மணி நிலவரம் [][][][]
@@@@22/03/2017@@@@
தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*நெல்லை மாநகராட்சி கமிஷனர் ஆஜராக பசுமை தீர்ப்பாயம் உத்தரவு*
*தீபா நாளை வேட்பு மனு தாக்கல்*
*பெங்களூருவில் தனி ஒருவனாக 3 ஏரிகளை சுத்தம் செய்துள்ள 29 வயது இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன*
(0)(0) *அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற முடிவை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடங்கி நடந்து வருகிறது. -122 எம்.எல்.ஏக்கள், 38 எம்.பிக்கள் இருப்பதால் சசி அணிக்கே இரட்டை இலை- -உணவு இடைவேளைக்காக 45 நிமிடம் ஒதுக்கப்படும் -உணவு இடைவேளைக்குப் பின்னர் சல்மான் குர்ஷித், மோகன் பராசுரம் வாதம் -மேலும் 2 மணிநேரம் வாதங்கள் தொடரும் -இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் ஆலோசனை -ஓபிஎஸ் அணி சி.எஸ். வைத்தியநாதன் 50 நிமிடம் வாதிட்டார் -தண்டனை பெற்ற குற்றவாளி வேட்புமனுவில் எப்படி கையெழுத்திட முடியும்? -ஓபிஎஸ் அணி குருகிருஷ்ணமூர்த்தி 70 நிமிடம் வாதிட்டார் -சசி அதிமுகப் பொதுசெயலராக சட்டப்படி தடை இல்லை -அதிமுகவில் பிளவே இல்லை- சசி வக்கீல் அரிமா சுந்தரம் -1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிக்கு ஆதரவு -65 உறுப்பினர்கள்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு- சசிகலா வக்கீல் அரிமா சுந்தரம் -ஓபிஎஸ் அணியின் சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் -43 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தரும் பிரமாண பத்திரம் தாக்கல் -95% அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் எங்களுக்கே ஆதரவு- ஓபிஎஸ் வக்கீல் -நாங்களே உண்மையான அதிமுக- ஓபிஎஸ் வக்கீல் -அதிமுகவில் ஜெ.வுக்கு அடுத்த மூத்த நிர்வாகி மதுசூதனன் -மதுசூதனன் பரிந்துரைப்படி இரட்டை இலை எங்களுக்கே- ஓபிஎஸ் வக்கீல் -ஓபிஎஸ் அணி வாதம் முடிவடைந்தது -சசிகலா தரப்பு வக்கீல்களின் வாதம் தொடங்கியது -ஆர். கே. நகர் இடைத்தேர்தல் - ஒபிஎஸ் வீட்டில் ஆலோசனை -ஆழ்வார்பேட்டை வீட்டில் ஓபிஎஸ் ஆலோசனை -இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை -இரட்டை இலை கிடைக்காவிட்டால் என்ன சின்னம் தேர்வு செய்வது -ஓபிஎஸ் வீட்டில் அதிமுகவினர் ஆலோசனை -இரட்டை இலை சின்னத்தை முடக்குகிறது தேர்தல் ஆணையம்? -சட்டரீதியாக பன்னீர் அணிக்கே இரட்டை இலை- குருகிருஷ்ணமூர்த்தி -தாங்களே உண்மையான அதிமுக- ஓபிஎஸ் அணி -எங்காளுக்கே இரட்டை இலை சின்னம் -அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களிடமே உள்ளனர்: ஓபிஎஸ் தரப்பு -சசிக்கே போட்டியிட தகுதி இல்லை- ஓபிஎஸ் அணி வாதம் -போட்டியிட தகுதியில்லாத சசி வேட்பாளரை அறிவிப்பதா? -ஒவ்வொரு தரப்பிலும் 3 வக்கீல்கள் வாதம் -தண்டனை பெற்ற சசிக்கு சின்னம் ஒதுக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது -இரட்டை இலை சின்னம் ஒதுக்கினால் சசியை அங்கீகரிப்பதாகும் -சசியை அங்கீகரிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும் -சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது -தண்டனை பெற்ற குற்றவாளியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க கூடாது -சசி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சி விதிக்கு எதிரானது -தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி வாதம் -சசி நியமனமே கேள்விக்குறி; அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல -ஒவ்வொரு அணிக்கும் 90 நிமிட நேரம் ஒத்துக்கப்பட்டுள்ளது -சசி அணி சார்பில் அரிமா சுந்தரமும் வாதிடுகிறார் -ஓபிஎஸ் அணிக்கு ஹரிஷ் சால்வே, வைத்தியநாதன் வாதம் -ஓபிஎஸ் அணிக்கு மனோஜ் பாண்டியன், குருகிருஷ்ணகுமார் வாதம் -சசிகலா அதிமுகவுக்காக மோகன் பரசாரன் வாதம் -சசிக்காக காங்கிரசின் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் வாதம் -தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் வாதம் -இரட்டை இலை சின்னம்- தேர்தல் ஆணையத்தில் வாதம் தொடக்கம் -தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதியும் வருகை -இன்னும் சற்று நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை -தலைமை தேர்தல் ஆணையத்தில் சசி, ஓபிஎஸ் தரப்பு ஆஜர் -ஓபிஎஸ் தரப்பின் 12 எம்.பி.க்களும் ஆஜர் -ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகிறார் -சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகிறார்--சசி தரப்பில் தம்பிதுரை தலைமையில் எம்பிக்கள் தேர்தல் ஆணையம் வருகை*
*தெற்கு டெல்லியில் 18 வயது பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
*சத்தீஸ்கர் மாநிலம் ஜடல்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற நக்சல்கள் தேடுதல் வேட்டையில் 2 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையில் 5 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏரளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன*
🇮🇳 *மக்கள் கருத்தை கேட்ட பிறகே ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும்: தர்மேந்திர பிரதான்*
*திருப்பதி கோயிலில் தேவஸ்தான ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஊழியர்கள் தாக்கியதில் பத்மநாபன் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்*
*டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு மேல் மதுக்கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய, மணிலா நெடுஞ்சாலைகளில் இருந்து 500மீ தூரத்துக்குள் மதுக்கடை இருக்கக்கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது*
*உத்திர பிரதேசத்தில் மூன்று இறைச்சி கடைகளை தீ வைத்து எரித்த மர்மநபர்கள்*
***நைஜீரியாவில் மைதுகுரி என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
🇮🇳 *உ.பி-யில் பசுக்கடத்தல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு*
🇮🇳 *உலக தண்ணீர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரை சேமிக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மணற்சிற்பம் ஒன்றை வரைந்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*SRM மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கித் தருவதாக பலகோடி வசூலித்து ஏமாற்றியதாக மதன் மீது வழக்கு பதிவு செய்யப்படபட்டது. வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜாமின் வழங்க ஐகோர்டில் SRM நிறுவனர் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம் அளித்தார். மதன் SRM ஏஜென்ட் என்பதால் ரூ.10 கோடி தொகையை கட்ட பச்சமுத்துக்கு கோர்ட் ஆணையளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மதன் ஜாமினுக்காக ரூ.10கோடிக்கு உத்தரவாதம் அளிப்பதாக பச்சமுத்து கூறியுள்ளார்*
🇮🇳 *2007-ம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை*
🇮🇳 *சத்தீஷ்கர் மாநிலம் பீஜப்பூர் என்ற இடத்தில் வீட்டில் இருந்த காவலர் ஒருவரை நக்சலைட் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
🇮🇳 *வறட்சி நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.2,096.80 கோடி தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழு உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் மத்தியகுழு அதிகாரிகள் வறட்சி பாதிப்பை ஆய்வு செய்தனர்*
🇮🇳 *சசிகலா, தினகரன் மீது நிலஅபகரிப்பு புகார் : போலீசார் விசாரணை*
🇮🇳 *தீபா பேரவையினர் ஓபிஎஸ் அணியில் இணைப்பு : மாபா பாண்டியராஜன்*
🇮🇳 *நாளை காலை 10 மணிக்கு மதுசூதனன் மனு தாக்கல் : மாபா பாண்டியராஜன்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக