இரட்டை இலை விவகாரத்தில் இன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.
இரண்டு தரப்புக்களும் தீவிரம் காட்டி வருகின்றன.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
முடிவு எப்படி இருக்கும் என்பதில் எவராலும் துணிந்து கருத்துக் கூற முடியாத நிலையே உள்ளது.
எனது பார்வையில் மூன்று விதமான கோணத்தில் இதற்கான பதிலை பெற முடியும் என நினைக்கிறேன்.
ஒன்று, அதிமுகவின் சட்டப்படியானது. பொதுசெயலாளரை தேர்ந்தெடுத்தவர்களே அவரை இப்போது செல்லாது என்று கூறுவதால் அந்த வாதம் செல்லாது. ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர் அணியில் இருக்கிறார்கள்.
இரண்டு, பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை வைத்து முடிவெடுக்கலாம். அப்படி பார்த்தாலும் சசிகலாவுக்கே சாதகமான அம்சம் இருக்கிறது. ஏனெனில் ஓபிஎஸ் அணி செயற்கழுவை இதுவரை கூட்ட முடியவில்லை
மூன்றாவது , இதுதான் முக்கியமானது. மத்திய பாஜக அரசின் பார்வை.
பாஜகா இதில் எப்படி சிந்திக்கும் என்பதை நம்மால் யோசிக்க முடிந்தால் என்ன முடிவு வரும் என்பதை யூகிப்பது கடினமாக இருக்காது.
சின்னத்தை முடக்குவதன் மூலம் ஒரு பதட்டத்தையும் எம்எல்ஏக்களின் மத்தியில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தி இந்த தேர்தலிலும் மட்டும் அல்லாமல் தேர்தலுக்குப் பின்னால் ஆட்சியைக் கலைக்கவுமான ஒரு சரியான வாய்ப்பாகவே பாஜக இதை பயன்படுத்தும்.
எனவே பாஜகவின் விருப்பப்படி சின்னம் முடக்கப்படவே வாய்ப்புக்கள்
அதிகம் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக