விருதுநகர்: 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மைய பயிற்சி வகுப்புக்கு செல்ல நிதி உதவி கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமின் சல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர் ஜெயக்குமார் நாராணாபுரம் அரசுப் பள்ளியில் பயின்றுவருகிறார்.
இவர் பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கும் வகையிலான இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக பல்வேறு கண்காட்சியில் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மைய பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதற்கான பணம் இல்லாததால் அவரது ரஷ்ய பயணம் கேள்விக்குறியானது. இதுகுறித்த செய்தி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிவகாசி நிருபர் கணேஷ் வெளிக்கொண்டுவந்த நிலையில், அந்த மாணவருக்கு ரஷ்யவாழ் தமிழர் விஜயகுமார் 2 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
மேலும் பலர் அவருக்கு உதவிவரும் நிலையில் ரஷ்யா செல்ல அயத்தமாகி வருகிறார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக