மாநகராட்சியாகும் 3⃣ நகராட்சிகள் 😮
ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👍. தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், இது 15 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த 3⃣ நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும், பேரூராட்சியாக இருக்கும் குன்றத்தூர், மாங்காடு ஆகியவை கிளை நகராட்சிளாக மேம்படுத்தப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது👏.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌳 மரம் வெட்டுவதை தடுத்த இளம்பெண்👧 எரித்துக்🔥 கொலை😱
ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் லலிதா. அந்த பஞ்சாயத்தில் சாலை அமைக்க லலிதாவின் தோட்டத்தில் இருந்த் 🌳 மரத்தை வெட்ட பஞ்சாயாத்தார் அறிவுறுத்தினர். ஆனால் லலிதா மறுத்து😲 வந்தார்.
இந்நிலையில், நேற்று (26.3.2017) அன்று கிராமத் தலைவர் ரண்வீர் சிங் உட்பட சிலர் லலிதா வீட்டிற்கு சென்று மரத்தை வெட்டுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சண்டை முற்றிய நிலையில் கிராமத் தலைவர் உட்பட சிலர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி⛽, தீ வைத்தனர். இதில் உடல் முழுவதும் தீக்காயத்தோடு, 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(27.3.2017) காலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக 10 பேரை தீர விசாரிப்பதாக 👮போலீசார் கூறியுள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தமிழக 🐟மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு 😱
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்⛵, 3000க்கும் அதிகமான 🐟மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 381 விசைப்படகுகளில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 6⃣ பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி 2⃣ விசைப்படகுகளில் இருந்த மொத்தம் 12 மீனவர்களையும் சிறைபிடித்தது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் ராமதேவன் கூறியதாவது, "🐟 மீனவர் சுட்டுக்கொன்றதை கண்டித்து 11 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தற்போது கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறோம். கடந்த 22-ந் தேதி 8⃣பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தற்போது மேலும் 12 மீனவர்களை அவர்கள் கைது⛓ செய்து உள்ளனர். எனவே மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
To follow Tamil. Enaiya Seithigal. on pksamy
Add to your group: +918667670919
'எம்.ஜி.ஆர்- அம்மா-தீபா' பேரவை' பொது செயலாளர் தீபாவுக்கு படகு⛵ சின்னம் 👍
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி, நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 'எம்.ஜி.ஆர்- அம்மா-தீபா' பேரவை சார்பில் போட்டியிடும் தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது .
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
ஏற்கனவே, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அவர் அறிவித்திருந்தார். தீபா 3⃣ சின்னங்களை கேட்டுள்ளார். ஒன்று திராட்சை கொத்து, பேனா, படகு. இச்சின்னத்தை விரும்ப காரணம் ஆர்.கே.நகர் மீனவர்கள் நிறைந்த பகுதி. தீபாவின் தந்தையும் இறால் ஏற்றுமதி தொழில் செய்தவர். எனவே ⛵படகு மீது ஆர்வம் காட்டுகிறார். இந்த் நிலையில் இன்று தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு சின்னத்தை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
பொதுமக்களிடம் ஆதரவு கோரும் விவசாயிகள் 😟
வறுமையால் தற்கொலை செய்த விவசாயிகளின் மண்டை ஓட்டை 💀 கழுத்தில் மாட்டியும், கையில் திருவோடு ஏந்தியும், அரை நிர்வாணமாக டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர் நம் தமிழக விவசாயிகள். போராட்டத்தை கைவிட கோரி பல அமைச்சர்கள் வற்புறுத்தினர். ஆதரவு கரம் நீட்டுவதாக தெரிவித்தனர். ஆனால், நம் விவசாயிகளுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை- தமிழ் இணைய செய்திகள்
🔹வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 🔹காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், 🔹விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர்✊. இவர்களுக்கு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற விவசாயிகள், மாணவ அமைப்பினர், இளைஞர்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே போராட்டம் நடத்தி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 16½ கிலோ தங்க கட்டிகள் சிக்கியது 😱
இலங்கையில் இருந்து 🌊கடல் வழியாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வழியாக தனியார் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான மினி லாரியை, மறித்து அதிகாரிகள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதில் 16½ கிலோ தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி💰 ஆகும். உடனே தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், இந்த தங்க கட்டிகளை சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. கடத்தல் தங்கம் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என 👮போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com விஷாலுக்கு ஆளுங்கட்சி ஆதரவளிக்குமா❓
வரும் ஏப்ரல்.2ந் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல்🗳நடைபெறவுள்ளது. களமிறங்குவது 4⃣அணிகளாக இருந்தாலும் போட்டி என்னமோ விஷாலை எதிர்த்து தான்😳.விஷாலுக்கு எதிர் அணிகளாக போட்டியிடும் அனைவரும் ஒன்றிணைந்து விஷாலை எதிர்க்கிறார்கள்😱. விஷாலுக்கு எதிரான அணியினர்💺முதல்வரிடம் சென்று ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளனர்😯.💺முதல்வரோ அதிகார மையத்திடம் கேட்க📞,"ஏற்கனவே, கமல் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்😟.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்🗳முடியும் வரை யாருக்கும் ஆதரவும் அளிக்க வேண்டாம்🚫.சினிமா விவகாரத்தில் தலையிடவும் வேண்டாம்😳"என்று பதில் வந்து விட்டதாம்😱.இது ஒரு புறம் இருக்க, எதிர் கட்சியை சேர்ந்த உதயநிதி, விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தனது ஆதரவை தெரிவித்து உள்ளாராம்🙂.என்ன ஆக போகிறதோ⁉பொறுத்திருந்து பார்ப்போம்🤔
தமிழ் இணைய செய்திகள் சேவையை பெற
உங்கள் குரூப்பில் +918667670919 இந்த எண்ணை சேர்க்கவும்
🔌இரட்டை விளக்கு மின்கம்பத்தை தடை செய்ய கோரி டிடிவி தினகரன் மனு📜
RK நகர் தொகுதியில், 'அஇஅதிமுக அம்மா' அணியின் வேட்பாளரான டிடிவி தினகரன், 'அஇஅதிமுக புரட்சிதலைவி அம்மா' கட்சியின் சின்னமான 🔌'மின்கம்பத்தை' தடை செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். 🗓ஏப்ரல் 12ம் தேதி RK நகர் தொகுதியில், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுக அணி இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. இதில் அதிமுக பெயரையும், கொடியையும், 🌱இரட்டை இல்லை சின்னத்தையும் எந்த அணியும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பின்னர் அஇஅதிமுக அம்மா கட்சி 'தொப்பி' சின்னத்தையும், 'அஇஅதிமுக புரட்சிதலைவி அம்மா' கட்சி 'இரட்டை விளக்கு மின்கம்பத்தை' சின்னமாக அறிவித்தது. இந்நிலையில், 🔌இரட்டை விளக்கு மின்கம்பம், 🌱இரட்டை இலையை போல் உள்ளதால் இந்த சின்னத்தை தடை செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக