காலை தமிழ் இணைய செய்திகள் http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை தமிழ் இணைய செய்திகள் http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com


http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
     *-காலை செய்திகள்-*
           *_28 - 03 - 2017_*
   *_செவ்வாய்க்கிழமை_*

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

      *_தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு 31ம் தேதி அடிக்கல்நாட்டு விழா_*

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான சிஎம்டிஏ மற்றும் எம்எம்டிஏ அனுமதி கிடைத்துள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது. கார்ப்பரேஷன் அனுமதி ஓரிரு நாளில் கிடைத்துவிடும். எனவேவரும் 31ம் தேதி காலை, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் பெப்சி அமைப்பிலுள்ள 23 சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

*_✴🇮🇳✴இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு_*

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி ஏஎஸ்பி ஆஷிஷ்ராவத் நெல்லை சேரன்மகாதேவி கோட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அரக்கோணம் உட்கோட்ட ஏஎஸ்பி சக்திகணேசன் கமுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். 2 அதிகாரிகளையும் மாற்றம் செய்து முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

*_✴🇮🇳✴தற்கொலை முயற்சி கிரிமினல் குற்றம் அல்ல: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்_*

டெல்லி: தற்கொலை முயற்சி கிரிமினல் குற்றம் அல்ல சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்வோருக்கு மன நல ஆலோசனை வழஙக மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
           *_28 - 03 - 2017_*
   *_செவ்வாய்க்கிழமை_*

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•           *_தமிழ் இணையசெய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴சென்னை நகரில் அந்தரத்தில் தொங்கும் ஒப்பந்த தொழிலாளர்கள்: பாதுகாப்பு மிஸ்சிங்; அதிகாரிகள் அலட்சியம்_*

சென்னை: சென்னை நகரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் பாலப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணி சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் வடமாநிலம் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், பலியானவரின் குடும்பங்களுக்கு எவ்வித நஷ்டஈடும் வழங்கப்படுவதில்லை என ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உதாரணமாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் மேல் இருக்கும் பழைய பாலத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. 

அப்பாலத்தில் விரிசலடைந்த பகுதிகளை கொத்தி சீரமைக்காமல், அவற்றில் சிறுசிறு கற்களை வைத்து பூசுவேலை செய்து, அப்பாலத்துக்கு சுண்ணாம்பு அடித்து சீரமைப்பு பணி நடைபெற்றதாக அரசு தரப்பில் கணக்கு காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இப்பணிகளின்போது, அப்பாலத்தில் வேர் விட்டிருந்த செடிகள் அகற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து, அப்பாலத்தில் மண்டியுள்ள செடிகளை வேரோடு அகற்றும் பணிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாலத்தின் பக்கவாட்டு சுவரை பிடித்தபடி கீழே இறங்கி, அங்குள்ள கைப்பிடி சுவரை கெட்டியாக பிடித்து, அந்தரத்தில் தொங்கியபடி பாலத்தில் இருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதேபோல், சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கடந்த வாரம் மிக உயரத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

இப்பணியின்போது, இக்கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள பக்கவாட்டு கம்பிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் கயிறுகளை கட்டி, அதில் தொங்கியபடி கண்ணாடிகளை துடைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இப்பணியில் மிக உயரமான இடத்தில் பணி செய்வதற்கான எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அப்பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒருசில ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது, ‘நாங்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக இதுபோன்ற அபாயகரமான பணிகளில் ஈடுபடுகிறோம். எங்களை இப்பணிகளில் ஈடுபடுத்தும் ஏஜென்சிகள், இதுபோன்ற உயரமான கட்டிடங்களில் பணியாற்றுவதற்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை.

சாதாரண கூலியைவிட இப்பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 200 வழங்கப்படுவதால், உயிரை பணயம் வைத்து துணிந்து ஈடுபடுகிறோம். இதில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஏஜென்சியினரும் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உரிய இழப்பீட்டை வழங்குவதில்லை. பலியாகும் தொழிலாளர்கள் மீது ஏதேனும் பொய்யான காரணத்தை கூறி, அவ்வழக்கை போலீசாரும் மூடிவிடுகின்றனர். நாங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று கூறினால், எங்களை அப்பணியில் இருந்து நீக்கிவிடுவர். எங்களின் பரிதாப நிலையை எடுத்துக் கூறி, பணி பாதுகாப்பு அளிக்க எந்தவொரு அமைப்பும் முன்வரவில்லை’ என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘இதுபோன்ற உயரமான கட்டிடங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதால் கூடுதல் நிதி செலவாகிறதே என நிர்வாகத் தரப்பினர் கருதக்கூடாது. இத்தகைய தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசும் பல்வேறு தனியார் கட்டிட உரிமையாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உயரமான கட்டிடங்களில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இனியாவது விடிவுகாலம் பிறக்கும.  
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
           *_28 - 03 - 2017_*
   *_செவ்வாய்க்கிழமை_*

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டு ஏழுமலையானுக்கும் சிக்கல்_*

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.12.7 கோடியை மாற்ற தேவஸ்தானம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசு  கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதன்பின்னும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பலர் பழைய ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தினர். இதனை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கால அவகாசம் முடிந்துவிட்டதால் இவற்றை மாற்றமுடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ராஜம்பேட்டை எம்பி மிதுன்ரெட்டி நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போது தேவஸ்தானத்திடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு நிதியமைச்சர் ராம் மேக்வால், 2017 வங்கி சட்டத்தின்படி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்ற முடியாது என்று தேவஸ்தானத்திற்கு  எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மாநில அரசின் மூலமாக நிதித்துறை அமைச்சகத்திடம் பேசி தேவஸ்தான கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ரூ.12.7 கோடியை மாற்ற தேவஸ்தானம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் செல்லாத நோட்டுகளை காணிக்கையாக செலுத்த வேண்டாம் அவ்வாறு செலுத்தினால் அது கடவுளுக்கு வழங்கப்பட்ட காணிக்கையாகாது என்றும் தெரிவித்திருந்தார்.

    
         
  

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

    *-தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴ஐஃபா உற்சவம் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் விழா: நாசர் பேச்சு_*

ஐதராபாத் : ஐஃபா திரைப்பட விருது விழா, சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களுக்கான ஐஃபா உற்சவம்  விருது விழா ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நாசர் பேசியதாவது: இந்த விருது விழாவுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தோம். இப்போது நான்கு மொழிகளுக்கும் விருது வழங்கும் விழா நடைபெறுவது கலைஞர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம். ஐஃபாவுடன் இணைந்து தெலங்கானா அரசும் இந்த விழாவுக்கு உறுதுணையாக இருக்கிறது.  திரைப்படக் கலைஞர்களுக்கு இதுபோல் அரசு அங்கீகாரம் வழங்குவது ஆரோக்கியமான விஷயம். ஐஃபா திரைப்பட விருது விழாவை அடுத்த ஆண்டு சென்னையில் நடத்த வேண்டும்.  இதற்காக ஐஃபா குழுவினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இது சினிமா கலைஞர்க ளை ஊக்குவிக்கும் விழா. எங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் விழா. இவ்வாறு நாசர் பேசினார்.தமிழ் இணைய செய்திகள்
 
நடிகை லட்சுமி ராய் பேசும்போது, ‘‘இரண்டு நாட்கள் ஐஃபா விழா நடப்பது திருவிழா போல் இருக்கிறது. இந்த விழாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நானும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ராணா, சிவா, நானி, நடிகைகள் அக்‌ஷரா ஹாசன், பிரக்யா ஜெய்ஸ்வால்,  சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி இயக்குனர் ஆன்ட்ரே திம்மன்ஸ், தெலங்கானா சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலாளர் வெங்கடேஷம் உட்பட பலர் பங்கேற்றனர்.

*_✴🇮🇳✴லண்டன் தாக்குதலில் மேலும் ஒருவர் கைது_*

லண்டன் : லண்டன் நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி தொடர்பாக மேலும் ஒருவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கடந்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி காரில் தாறுமாறாக வந்து, 5 பேரை கொன்ற தீவிரவாதி காலித் மசூத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் காலித் மசூத் மட்டுமே ஈடுபட்டதாக போலீசார் கூறி வந்தாலும், தொடர்ந்து சிலர் கைதாகி வருகின்றனர். இதனிடையே, பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் 30 வயது நபரை தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுவரை 12 பேர் கைதாகி 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3 பேரிடம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

*_✴🇮🇳✴கபில்தேவை முந்தினார் ஜடேஜா_*

ஒரு டெஸ்ட் சீசனில் 500+ ரன் மற்றும் 50+ விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக ஜொலித்த 3வது வீரர் என்ற பெருமை ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ் 1979-80 சீசனிலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 2008-09 சீசனிலும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டியில் 556 ரன், 71 விக்கெட் எடுத்துள்ள ஜடேஜா, அவர்கள் இருவரையும் முந்தி அசத்தியுள்ளார்.

* நடப்பு சீசனில் 6வது முறையாக 50+ ஸ்கோர் அடித்த ஜடேஜா, இந்த வகையில் கேப்டன் விராத் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராகுலின் சாதனையை சமன் செய்தார். புஜாரா மட்டுமே 12 முறை 50+ ஸ்கோர் அடித்து முதலிடம் வகிக்கிறார். விக்கெட் வேட்டையிலும் ஜடேஜா 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* நடப்பு தொடரில் உமேஷ் யாதவ் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். முன்னதாக 2011-12 பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் 14 விக்கெட் வீழ்த்தியதே அவரது முந்தைய அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளார்.
1997ல் பிரிட்ஜ்டவுன் டெஸ்டில் 120 ரன் இலக்கை துரத்தத் தவறியதே இந்திய அணியின் மோசமான செயல்பாடாக உள்ளது. 

* தென் ஆப்ரிக்காவுடன் ஹாமில்டனில் நடந்து வரும் 3வது டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 314 ரன்னில் ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் 148 ரன், சான்ட்னர் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து மோதும் 4 நாள் போட்டி டெல்லி, கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்குகிறது.

* இலங்கை - வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, தம்புல்லா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.

*_✴🇮🇳✴மயாமி டென்னிஸ் 4வது சுற்றில் வீனஸ்_*

நியூயார்க் : மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
மூன்றாவது சுற்றில் ரோமானியாவின் பேட்ரீசியா மரியாவுடன் மோதிய வீனஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), சிமோனா ஹாலெப் (ரோமானியா), சமந்தா ஸ்டோசர் (ஆஸி.), ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரபேல் நடால் (ஸ்பெயின்), ஜாக் சாக், டொனால்டு யங் (அமெரிக்கா), பேபியோ பாக்னினி (இத்தாலி), கெய் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் வெற்றி
   
  

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
   தமிழ் இணைய செய்திகள்

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள 144 தடை உத்தரவு_*

புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள 144 தடை உத்தரவு பிரப்பித்துள்ளது. ஏற்கெனவே தடை இருந்தும் தொடர் மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

*_✴🇮🇳✴ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் - பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு_*

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்கம் அருகே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_✴🇮🇳✴வேலூர் அருகே பல மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்_*

வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    

       

                  

✍🏼JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

✍🏼அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

✍🏼Sastra University |Directorate of Distance EducationB.Ed Merit Rank List for 2017 Published

✍🏼மற்ற மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.

✍🏼தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை மார்ச் 29ல் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

✍🏼மூன்று மாநிலத்தில் மட்டும் மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

✍🏼வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அரசு ஊழியர்களுக்கு ,விலக்கு அளிப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டகருவூல அலுவலர் அவர்களின் ஆணை வெளியிட்டுள்ளார்

✍🏼தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை (29.3.17) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
விடுமுறை பட்டியலில் (DEE List of holidays) இன்று விடுமுறை இருந்தது , அதனை மாற்றி பள்ளிகளுக்கு இன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டு , நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*இன்று மாலை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம் : தமிழக விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படுமா?*

புதுடெல்லி: டெல்லியில் 15-வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் நாளுக்கு ஒரு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். நேற்று எலி கறி உண்ணும் போராட்டம் நடத்தினர். 

அவர்களுக்கு அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உத்திரபிரதேசம், அரியானா, மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். வறட்சி நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும், பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கை ஆகும். 

இந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிட உள்ளனர். நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
[3/28, 8:45 AM] ‪+91 93676 29462‬: *ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியின் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.*
[3/28, 8:46 AM] ‪+91 93676 29462‬: *'குல்லா’ போட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு... தினகரன் தேர்தல் அறிக்கையும் வாக்காளர்களின் பாட்டும்*

*அதிமுக அம்மா கட்சியின் ஆர்.கே. நகர் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்காள பெருமக்கள் ‘குல்லா‘ போட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு என்ற பாடலைப் பாடி கிண்டலடித்து வருகின்றன
         
       

     

*_✴🇮🇳✴திருச்சியில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனிப்படை பெங்களூருக்கு விரைவு_*

திருச்சி: திருச்சியில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளது. சிறுவனை கடத்தியவர்கள் பெங்களூருவில் இருக்கும் தகவலை தொடர்ந்து சிறுவனை கண்டுபிடிக்க ஏ.டி.ஸ்.பி நடராஜன் தலமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

*_✴🇮🇳✴தருமபுரி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்_*

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். உழவன்கொட்டாய் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கிரம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

*_✴🇮🇳✴யுகாதி பண்டிகையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மக்களுக்கு வாழ்த்து_*

புதுடில்லி: தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படுகின்றதையெட்டி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், பண்டிகை புது வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்தின் பிறப்பிடமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

              
     http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com        

*_✴🇮🇳✴உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்திஅர்ஜுனா காலமானார்_*

புதுடெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்திஅர்ஜுனா காலமானார். இவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திமுக வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் மகராஷ்டிர மாநிலத்தின் அரசு வழக்கறிஞராக நிண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். அரசியல் சாசனம், மனித உரிமை, பொதுச்சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுமை மிக்கவர் ஆவார். 

*_✴🇮🇳✴ஓசூரில் நிலவும் கடும் வறட்சி : பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை; குடிநீருக்காக தவிக்கும் மக்கள்_*

ஓசூர்: தமிழக - கர்நாடக எல்லையான ஓசூரில் நிலவும் கடும் வறட்சியால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓசூர் தொழில் நகர் மட்டுமல்ல; மலர் சாகுபடியும் அதிகளவில் நடைபெறும் இடமாகும். மழையின்றி தமிழகம் முழுவதும் நிலவும் வறட்சி ஓசூரையும் விட்டு வைக்கவில்லை. வறட்சி காரணமாக நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து விட்டதால் நாள்தோறும் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. 

அத்துடன் விவசாயத்திற்கு போதுமான நீரின்றி கருகி விட்டதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஓசூருக்கு அருகில் 3 கி.மீ. தொலைவில் தெண்பெண்ணை ஆறு உள்ளது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை கிளை கால்வாய்கள் மூலம் ஏரிகளில் நிரப்பினால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிம் செழிக்கும். குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்கின்றனர் விவசாயிகள். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*_✴🇮🇳✴2017-18 நிதி ஆண்டு துவக்கமான ஏப்.,1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய அறிவிப்புகள்_*

புதுடில்லி: 2017-18 நிதி ஆண்டு துவக்கமான ஏப்.,1ம் தேதி முதல் பல்வேறு புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது. அவை:

* ரொக்கப் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாடு மத்திய அரசு ரூ.2 லட்சமாக குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.

* ரயில் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ‛விகால்ப்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள், அதே வழித்தடத்தில் அடுத்ததாக இயங்கும் பிரீமியர் ரயில்களில் பயணிக்கும் திட்டமும் நடைமுறைக்கு வருகிறது.

* எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு, ஏப்.,1 முதல் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளன.

* வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த பி.எஸ்.,4 கட்டுப்பாட்டுகள் கொண்ட விதியும் ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.

*_✴🇮🇳✴மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள்; அந்த மாற்றமாக நாங்கள் இருப்போம் : கங்கை அமரன்_*

சென்னை: மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள்; அந்த மாற்றமாக நாங்கள் இருப்போம் என்று ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்

       🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here