*சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு எப்படி நடக்கும் என்பது குறித்த முறை இது தான்.*
_தீர்மானத்திற்கு 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தவுடன் சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கி வெளியே சென்று விடுவார். பின்னர் அந்த தீர்மானம் தொடர்பாக துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இதற்கு பிறகு சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீது பேசுவதற்கு தி.மு.க.வுக்கு வாய்ப்பளிக்கப்படும்._
_மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேட்டுக்கொண்டால் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம். அதன் பின்னர் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். பொதுவாக குரல் வாக்கெடுப்புக்கே சபையில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் தி.மு.க. வற்புறுத்தினால் எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படலாம்._
_அப்போது அவையில் பிளாக் வாரியாக, தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என்று தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர் குறிக்கப்படும்._
_பெயர்களை சட்டசபை செயலாளர் படிப்பார். பின்னர் தீர்மானத்தை எதிர்ப்போர் தனியாகவும், நடுநிலை வகிப்போர் தனியாகவும் நிற்பார்கள். அவர்களின் பெயரை குறித்துக் கொண்டு சட்டசபை செயலாளர் வாசிப்பார்._
_தீர்மானத்தை ஆதரிப்போர் அல்லது எதிர்ப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தத் தீர்மானம் வெற்றியோ தோல்வியோ அடையும். இந்தத் தீர்மானத்தில் சபாநாயகரோ, அல்லது துணை சபாநாயகரோ வாக்களிக்க இயலாது._
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக