[][]காலை செய்திகள்[][]
தமிழ் இணைய செய்திகள்
23/03/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேறியது_*
*_முன்னாள் எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்_*
*_📝இனி பல்கலைக்கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களில் மாணவர்கள் புகைப்படம், ஆதார் எண்_*
*_📝சபாநாயகர் ப.தனபாலை பதவி நீக்கக்கோரி தீர்மானம்: சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு_*
*_🌴🌴சவுதி அரேபியாவில் படகு விபத்து: தமிழக மீனவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்_*
*_📝மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்யும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்_*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
✍🏼பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017
✍🏼TRB அறிவிக்கை- TET 2012,2013 மற்றும் SPECIAL TET 2014 தாள் 2 -ல் தேர்ச்சி பெற்றவர்கள் online -ல் தங்களது விவரங்களை சரிபார்க்க 23/3/17 வரை கூடுதல் அவகாசம்
✍🏼பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது.
✍🏼இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள் கூறினர்.
✍🏼திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
✍🏼ஸ்மார்ட் ( சிப் எல்லாம் இல்லை QR code மட்டும்தான்) ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை!!
✍🏼பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு 'மொட்டை' கடிதங்கள் குவிந்து வருகின்றன.
இதனால் இங்கு பறக்கும் படை கண்காணிப்பு தீவிரப்படுத்த கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
✍🏼AIADMK - வின்
இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு என தகவல். இரு தரப்பு பிரச்சினையால் முடக்கம்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍎'மாலுமி' இல்லாமல் தத்தளிக்குது அனைவருக்கும் கல்வி திட்டம்!
🌻 தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
இந்த கோரிக்கை சார்பாக தொடக்கக்கல்வித்துறை,பள்ளிக்கல்வித்துறை செயலர் மாற்றும் இயக்குனர்களுக்கு தமிழ்இணைய செய்திகள் ஏற்கனவே எழுத்துமூலமாக மனு கொடுத்துள்ளது.
🌻இதனால், 'முக்கோண சிக்கலில்' சிக்கி முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) தவிக்கின்றனர்.எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்காக கூடுதல் சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர்.
🌻இதில் மாறுதல், ஓய்வு போன்றவற்றால் காலியான பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் 2013 டிசம்பரில், இத்திட்டத்தின் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணித்த 375 மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.
🌻இதனால், கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, 'மாலுமி இல்லாத கப்பல்' போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
🌻 ஏற்கனவே, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கும் சி.இ.ஓ., க்களே எஸ்.எஸ்.ஏ., திட்டத்தையும் சேர்த்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
🌻 இதனால், பணிச்சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
🌻 எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். தமிழக பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக, 2,656 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
🌻மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு 1,476 கோடி ரூபாய், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு 1,264 கோடி ரூபாய் வரவேண்டும்.
🌻 ஆனாலும், மாநில அரசு போதிய நிதி ஒதுக்கிய நிலையில், கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
🌻இவர்களிடம் ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். இதன்மூலம் கல்விப் பணிகளில் சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்;
🌻 தகுதி அடிப்படையில் டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு கூறினர்
🍎கல்வி கட்டண கமிட்டி புதிய தலைவர் மாசிலாமணி
🌻சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
🌻தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டண விகிதங்களை நிர்ணயிக்க, 2009ல், தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது.
🌻அதன்படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
🌻இந்த கமிட்டி, தனியார், நர்சரி, மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.
🌻 கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்.தமிழ் இணைய செய்திகள்
🌻 அவருக்கு பின், ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார்.
🌻 ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவர், 2012ல் விலகினார். அந்த ஆண்டு ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, தலைவராக நியமிக்கப்பட்டார்.
🌻 அவர், 2015 டிச., 31ல் ஓய்வு பெற்றார். அதன்பின், தலைவர் நியமிக்கப்படவில்லை.
🌻 இதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இது குறித்து, தினமலர் நாளிதழில், பல முறை செய்தி வெளியிடப்பட்டது.
🌻இந்நிலையில், நேற்று கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணியை நியமித்து, அரசு உத்தரவிட்டது. இவரது பதவி காலம், மூன்று ஆண்டுகள்.
🍎பீகார் கல்லூரிகளில் இலவச வைபை சேவை அறிமுகம்!!!தமிழ் இணைய செய்திகள்
🌻பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இலவச வைபை சேவை திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் .
🍊கல்லூரிகளில் இலவச வைபை
🌻பீகார் தின விழாவை முன்னிட்டு மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 273 கல்லூரிகள் , 16 பல்கலைகழகங்கள் மற்றும் 30 கல்வி நிறுவனங்களில் இலவச வைபை சேவையை துவக்கி வைத்தார்.
🍎ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்
இ - சேவை மையத்தில் பெறலாம்
🌻விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.
🌻தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்; முகவரி மாற்றம்; பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
🌻அங்குள்ள ஊழியர்கள், மக்களை, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் இணைய செய்திகள்
🌻ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அதில், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள், இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
🌻இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஆதார்' கார்டில் உள்ள பெயர், முகவரி அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும். அதில், பிழைகள் இருப்பின், ரேஷன் கார்டுதாரர், தாங்களாகவே, 'டி.என்.பி.டி.எஸ்.டாட் காம்' என்ற இணையதளத்தில் சரி செய்து கொள்ள, மார்ச், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
🌻தற்போது, கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. எனவே, பிழை இருப்பவர்கள், கவலை அடைய வேண்டாம். அவர்கள், ஸ்மார்ட் கார்டு பெற்ற பின், வீட்டில் இருந்தபடியே, பி.டி.எஸ்., இணையதளத்தில் தாங்களாகவோ அல்லது அரசு, இ - சேவை மையங்களிலோ, சரி செய்து கொள்ளலாம்.தமிழ் இணைய செய்திகள்
🌻 பிழை திருத்திய கார்டை, தேவைக்கு ஏற்ப, இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். கூடுதல் கார்டுக்கு, அந்த மையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
🌻ஏப்., 1ல் துவக்கம் : சென்னையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துாரில், 'ஸ்மார்ட்' கார்டு வினியோகம் மற்றும் பொது வினியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், முதல்வர் பழனிசாமி, ஏப்., 1ல் துவக்கி வைக்கிறார்.
தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக