•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴✴அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமானவரித்துறை விசாரணை முடிந்தது_*
சென்னை: அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிந்தது. சுமார் 5 மணி நேரம் விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 7,8 தேதிகளில் விஜயபாஸ்கர் வீடு அலுவலங்களில் வருமான வரி சோதனை நடந்தது. மேலும் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
*_சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களின் போனஸை ஒரே நாளில் விழுங்கிய டாஸ்மாக் கடைகள்....கண்ணீருடன் பங்குனிப்பொங்கலை கொண்டாடும் குடுமகன்களின் குடும்பங்கள்_*
*_✴✴2016-ம் ஆண்டு மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்_*
டெல்லி: 2016-ம் ஆண்டு மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேறியது. புதிய சட்டதிருத்தத்தின்படி உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*_✴✴வருமானவரித்துறை சம்மனை எதிர்த்து துணை வேந்தர் கீதாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு_*
சென்னை: வருமானவரித்துறை சம்மனை எதிர்த்து துணை வேந்தர் கீதாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வருமானவரித்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப வருமானவரித்துறைக்கு அதிகாரமில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார்
*_✴✴பாகிஸ்தானில் உளவு பார்த கைது செய்யப்பட்ட இந்தியருக்கு மரண தண்டனை_*
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குல்பூஷன் யாதவ் என்பவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, ’ரா’உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴✴ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து திட்டமிட்ட நாடகம் : தினகரன் பேட்டி_*
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வருமான வரி சோதனைக்கும் சம்பந்தம் இல்லை என டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து திட்டமிட்ட நாடகம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ரத்துக்கு பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக தினகரன் புகார் தெரிவித்துள்ளார். இரட்டை இலைச் சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கம் எனவும் தினகரன் கூறியுள்ளார்.
*_✴✴ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் ரத்து? தேர்தல் ஆணையம் ஆலோசனை_*
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 சதவீதமே வாக்குகள் பதிவானதால் தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் பந்த் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பால் 6 சதவீதமே வாக்குகள் பதிவாகியுள்ளது.
*_✴✴சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயிலில் சிசிடிவி கேமரா_*
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. சோதனை முயற்சியாக பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமராவை ரயில்வே நிர்வாகம் பொருத்தியுள்ளது. சென்னையில் அனைத்து ரயில்களிலும் விரைவில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ரயில்வே மண்டல பொதுமேலாளர் அனுபம் சர்மா கூறியுள்ளார்.
*ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு*
டெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.தமிழ் இணைய செய்திகள்
*கடல் எல்லையில் ரோந்துப் பணியை அதிகரிக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை*
கொழும்பு: இந்திய கடல் எல்லையில் ரோந்துப் பணியை அதிகரிக்கும்படி இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பின்பும் தமிழக மீனவர்கள் அத்துமீறுவதாக இலங்கை அதிருப்தி தெரிவித்துள்ளது.
🔴🔴*முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கைது செய்ய போலீசார் தீவிரம்!*
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கைது செய்ய சென்னை ஆர்.கே.நகர் போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 6ஆம் தேதி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, ஆர்.கே.நகரில் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதாவின் சடலம், சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பது போன்ற பொம்மையை வைத்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சவப்பெட்டி பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்ததுபோல அமைக்கப்பட்டிருந்தது. இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பாண்டியரஜானை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் பாண்டியராஜன் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஓ.பி.எஸ். இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் பாண்டியராஜன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*திருவண்ணாமலையில்சாலை மறியல்*
தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதியில் அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதை கண்டித்து நல்லவன்பாளையம் பகுதி மக்கள் திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் அரைமணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
*திமுக, ஓபிஎஸ், பாஜக, வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையமும் இணைந்து அதிமுக அம்மா அணியை தோற்கடிக்க கூட்டணி அமைத்துள்ளது - அதிமுக அம்மா அணி தினகரன் பேச்சு!*
*அரியலூர்: அரியலூர் எஸ்.ஆர் நகரில்(அய்யப்பன் ஏரி அருகாமையில்) புதியதாக கட்டப்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையின் பார் கட்டிடம் இரவோடு,இரவாக மர்ம நபர்கள் அடித்து தரைமட்டம்.காவல்துறையினர் விசாரணை.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக