- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள்

*🔵🔵பதவி காலத்தில் சாதித்தது என்ன என்பது குறித்து மத்திய மந்திரிகளிடம் நரேந்திர மோடி அரசு அறிக்கை கேட்டுள்ளது.*

3 ஆண்டு பதவி காலத்தில் சாதித்தது என்ன என்பது குறித்து மத்திய மந்திரிகளிடம் நரேந்திர மோடி அரசு அறிக்கை கேட்டுள்ளது.
3 ஆண்டு நிறைவு
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த 2014–ம் ஆண்டு, மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. அடுத்த மாதம் அது, தன் 3 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறது.
இந்த 3 ஆண்டு காலத்தில் மந்திரியாக இருந்து கொண்டு செய்த சாதனை என்ன என்ற வகையில் மந்திரிகளிடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

*🔵🔵ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்*

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர் கொடுத் தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய ஹோட்டல் கட்டணம்தான்’’ என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி தெரிவித் தார்.

*எண்ணிக்கை 24ல் இருந்து 20 ஆக குறைப்பு : பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை*

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் காலை 12 விடைத்தாள், மதியம் 12 விடைத்தாள் என நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும். 200 மதிப்பெண்களுக்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதால், குறிப்பிட்ட நேரத்தில் 12 விடைத்தாள்களை சரியாக திருத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறுவதாக கூறப்படுகிறது. அவசர கதியில் திருத்துவதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், உரிய முறையில் விடை மதிப்பீடு செய்ய முடிவதில்லை எனவும் ஆசிரியர்கள் புலம்பிவந்தனர். குறிப்பாக மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும்போது, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் தெரிய வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் திருத்தப்படும் 24 விடைத்தாளில் இருந்து, 4 விடைத்தாள் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு மற்றும் கல்வித்துறையிடம் சில வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடப்பாண்டும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, காலை 10 பேப்பர், மதியம் 10 பேப்பர் என நாள்தோறும் 20 விடைத்தாள் திருத்தினால் போதும் எனவும், 4 விடைத்தாள்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். மேலும் முதல் முறையாக கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அதே கல்வி மாவட்டத்தில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றவும் அனுமதி அளித்துள்ளார். கடந்த 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 விைடத்தாள் திருத்தும் பணியில் நாள்தோறும் 20 விைடத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துகின்றனர். உயிரியல் விடைத்தாள்களை காலையில் 8ம், மாலையில் 8ம் என திருத்துகின்றனர். கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

*🔵🔴சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி*

சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் மட்டும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் பணியால் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட பள்ளத்தில் கார், பேருந்து நேற்று சிக்கியது குறிப்பிடத்தக்கது.

*🔷🔷வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து: ஓ.பி.எஸ். கருத்து*

வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார். மிக விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் ஆணையம் ரத்து செய்துள

*🔵🔵தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்*

வருமானவரிச் சோதனையில் சிக்கிய முதலமைச்சர், அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு பதிய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

*பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் இருப்பதால் அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தல்.

*
ஊழலுக்கு தேர்தல் ஆணைய ஆதாரம்:
அதிமுக அரசைக் கலைக்க வேண்டும்!
             -மருத்துவர் ராமதாஸ் அறிக்கை-

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ஆணையம் ரத்து செய்திருக்கிறது. எனினும், வாக்காளர்களுக்கு பணமும், பரிசுகளும் வழங்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டு இன்னொரு நாளில் நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 28 பக்க ஆணையில், தொகுதி முழுவதும் எப்படியெல்லாம் பணம் வினியோகிக்கப்பட்டது என்பது குறித்து வேதனையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. ‘‘ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தனர் என்று புகார்கள் வந்தன. இத்தகவல் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் ரூ.89 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள்  விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. வட்ட வாரியாக, வாக்காளர் வாரியாக வழங்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கரின் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன’’ என்று ஆணையம் கூறியுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளையும் சேர்ந்தவர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பல இடங்களில் வினியோகித்ததாகவும், பெரும்பாலான இடங்களில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆணையம்  தெரிவித்துள்ளது. அதிமுகவினர் பண வினியோகம் செய்து முடித்த பின்னர் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட வில்லை என்றாலும் இது ஊரறிந்த உண்மையாகும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதாக  தேர்தலை ஒத்திவைத்த ஆணையம், அதற்குக் காரணமான அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினாவாகும்.

பணம் வினியோகித்தோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையம் தப்பித்துக் கொள்ள முடியாது. எம்.எஸ்.கில் க்ஷிs தலைமைத் தேர்தல் ஆணையர் இடையிலான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘ சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்படுவது மிக முக்கியமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு கடலளவு அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. சில தருணங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இல்லாத நிலையில், மோசமான சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் தமது கடமையை செய்வதற்கு அனுமதிக்கும்படி இறைவனிடம் கையேந்தவோ அல்லது தமக்கு அதிகாரமளிக்கும்படி வெளிசக்திகளிடம் கெஞ்சவோ கூடாது. 324 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என ஆணையிட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் தஞ்சை, அரவக்குறிச்சி பொதுத்தேர்தலையும், இப்போது இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலையும் ஆணையம் ரத்து செய்தது. அவ்வாறு இருக்கும்போது அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களையும், அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்ய ஆணையம் தயங்குவது ஏன்?

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்ட போது, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அப்போது அக்கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் இப்போது இராதாகிருஷ்ணன் நகரில் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்க அரசியல் கட்சிகள் புதுமையான வழிமுறைகளை புகுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. ‘‘பிரச்சாரங்களின்போது சட்டவிரோதமாக  பணம் செலவழிக்கப்படுவதை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் அரசியல்கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் கடைபிடிக்கும் புதுமையான வழிமுறைகள் கடுமையான முறையில் ஒடுக்கப்படவேண்டும். இதுபோன்ற செயல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி தலைமைகள் ஒதுங்கிவிட முடியாது. இத்தகைய செயல்களுக்கு கட்சித்தலைமைகள் வெளிப்படையான அனுமதி தராவிட்டாலும், மறைமுகமான ஒப்புதல் அளிப்பதை மறுக்க முடியாது. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி பூத்துக்குலுங்க வேண்டுமானால் தவறு செய்யும் தங்கள் கட்சி வேட்பாளர்களை கட்டுப்படுத்த  தங்களின் தார்மீக நெறிசார்ந்த ஆதிக்கத்தையும், சட்ட அதிகாரத்தையும் கட்சித் தலைமைகள் பயன்படுத்த இதுவே சரியான நேரம் ஆகும்’’ என்று தேர்தல் ஆணையம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த அளவு வேதனைப்படுவதற்கும், வேண்டுகோள் விடுக்கவும் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவற்றின் கடந்த கால செயல்பாடுகளே இதற்கு உதாரணம் ஆகும். இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியதற்காக  அதிமுகவின் இரு அணிகள் மற்றும் திமுக தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த பழி இந்தக் கட்சிகளையே சாரும். ஆணையம் இப்போது விடுத்த வேண்டுகோளை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக விடுத்து வருகிறது. அதை ஜனநாயகப் படுகொலை செய்யும் திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாததுடன், அதற்கு செயல் வடிவம் கொடுக்க தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டவாறு ஜனநாயகம் பூத்துக் குலுங்க வேண்டுமானால்....

1. வாக்காளர்களுக்கு முதலமைச்சர் மற்றும் 30 அமைச்சர்களும் முன்னின்று ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்ததாக தேர்தல் ஆணையம் ஆதாரத்துடன் கூறியுள்ளது. வருமானவரித் துறையிடமும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஊழல் மூலம் குவித்த பணத்தைத் தான் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர் என்பதால் அதிமுக அரசைக் கலைக்க வேண்டும். ஆட்சிக் கலைப்பில் பா.ம.கவுக்கு உடன்பாடு இல்லையெனினும் ஜனநாயகத்தைக் காக்க இது அவசியமாகும்.

2. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 30 அமைச்சர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(1)(கி) பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(ணி), (தி) பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாற்றின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, திமுக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

4. வாக்காளர்களை விலைக்கு வாங்கிய அனைத்துக்கட்சிகளின் சின்னங்களையும் முடக்க வேண்டும்.

5. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையும், பதிவையும் ரத்து  செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

6. மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிற மாநிலத்தைச் சேர்ந்த, பிற மாநிலப் பிரிவைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியை நியமிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வரை வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.

🔵🔴 *கைது செய்யப்படுகிறாரா விஜயபாஸ்கர்?*

_சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவர் வீடு , அலுவலகத்தில் இருந்து வருமான வரித் துறை இரு நாட்களுக்கு முன் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அதில், ஆர்கே நகர் வாக்களார்களுக்கு பணம் விநியோகித்தது குறித்து உறுதி செய்யப்பட்டது. இதை தேர்தல் ஆணையமும் உறுதி செய்தது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விஜயபாஸ்கர் தற்போது விளக்கமளித்து வருகிறார்._

_அவரது விளக்கத்தில் திருப்தி ஏற்படாதபட்சத்தில் அமைச்சர் கைது செய்யப்படுவது உறுதியென்று நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன._

*அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவெடுத்த பின்னர் தான் ஆர்கேநகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு.*

🔴🔵 _சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் #Vijayabaskar, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் ஆஜர்._

_வருமான வரி சோதனை தொடர்பாக விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆஜர்._

*🔷🔷விமர்சனம் பண்ணுங்க! ஆனா... ரஜினிகாந்த் பரபர பேச்சு*

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது, 'அண்ணாமலை' படத்தில் நடிகர் சிவாஜி கணேசனை மனதில் வைத்தே நடித்தேன். சிவாஜி சார் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு போட்டியே இருந்ததில்லை. சிவாஜி குடும்பத்தின் பாரம்பர்யத்தைக் காக்கும் சுமை, விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது', என்றார்.

மேலும், வெளியாகும் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் பற்றிப் பேசிய ரஜினி, 'நீங்கள் தாராளமாகத் திரைப்படத்தை விமர்சிக்கலாம். ஆனால், விமர்சிக்கும்போது பயன்படுத்தும் வார்த்தையில் கவனம் வேண்டும். மனதைக் காயப்படுத்தாத வகையில் விமர்சியுங்கள்' என்றார். தனது டிரேட்மார்க் குட்டிக் கதையையும் கூறினார்.

இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் பங்கேற்றனர்.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.ccom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here