அரசியல் அரங்கம் /தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசியல் அரங்கம் /தமிழ் இணைய செய்திகள்

🔴அரசியல் அரங்கம்🔴
 
    தமிழ் இணைய செய்திகள்

*'ஜனநாயகப் படுகொலை, வெற்றியை தடுக்க சதி' : கொதிக்கும் டி.டி.வி தினகரன்!*

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க அம்மா கட்சி  டி.டி.வி. தினகரன் அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆர் கே நகர் இடைத்தேர்தலை,தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயகப் படுகொலை.  நான் வெற்றி பெறுவேன் என்று எனது வெற்றியை தடுக்க முயற்சிகள் நடந்தன. அதன்படிதான், போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பல தவறான தகவல்கள், சமூகவலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டன.

விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று. தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? இது ஒரு யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு. அதிகாரம் இருக்கும் காரணத்தால், அதைப் பயன்படுத்தி தேர்தலை ரத்து செய்துள்ளனர்.

பணப்பட்டுவாடா செய்ததற்கான, ஆதாரங்கள் இல்லை. இது தொடர்பான வழக்குகள் ஏதும் இல்லை. தேர்தல் நடந்திருந்தால் நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். எனது வெற்றி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின், துரைமுருகன் ஆட்சியை கலைக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை அழிக்க சதி நடக்கிறது. ஆனால், ஆதாரம் இல்லாமல் பா.ஜ.க-வை குற்றம்சாட்ட முடியாது. இது யாருடைய சதி என்று விரைவில் தெரியும்.

எங்களுக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை. இந்த சவால்களை எதிர்கொண்டு கட்சியைக் காப்போம்.  அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. எந்த கொம்பானலும் எங்களது ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. நான்கு ஆண்டுகள் எங்களது ஆட்சி தொடரும். 2021 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.  தேர்தல் ஆணையத்திடம், மீண்டும் இரட்டை இலை சின்னத்தைக் கோருவோம்.

தொலைக்காட்சிகள் இல்லை என்றால், தமிழிசை எல்லாம் வெளியே தெரியவே மாட்டார். ஆதாரங்களுடன் வருமானவரித்துறை சோதனை நடந்ததாக தமிழிசை கூறுகிறார். அவர் என்ன வருமானவரித்துறை அதிகாரியா? மத்தியில் ஆளும் கட்சி, ஆர்.கே.நகரில் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தேர்தல் நடத்திருந்தால், பா.ஜ.க 5,000 வாக்குகள் கூட பெற்றிருக்க முடியாது. தற்போது, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்" என்றார்.

🔴🔴🔴*தமிழகம் முழுவதும் உஷார் நிலை!*

*இடைத்தேர்தல் இரத்தை தொடர்ந்து இன்று சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பு தகவல்!*

🔴🔴*தமிழகத்தின் அவமானம்*

தொப்பி வாங்கியதில் கூட முறைகேடான கணக்கு காட்டியுள்ளனர் என தேர்தல் ஆணையம் வேதனை!

89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடந்ததுள்ளது என்ற வருமான வரித் துறையின் பரிந்துரையை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிமுக அம்மா அணி வேட்பாளரின் அத்துமீறலை தனது அறிக்கையில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை குறிப்பிட்டு நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என கூறியுள்ளது.

🔴*நியாயம் கேட்கிறார் தினகரன்!*

இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், தனது வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வரும் அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் இன்று ஆர்.கே.நகர் செல்ல உள்ளார். இதற்காக அதிமுக நிர்வாகிகள் ஆர்.கே.நகருக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் 15 சதவீத அளவே வாக்குகளை தினகரன் பெறுவார் என கணித்தது குறிப்பிடத்தக்கது.

*🔴முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்மீது வழக்கு!*

தேசியக்கொடியுடன் பிரச்சாரம் செய்ததாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போன்ற ஒரு சவப்பெட்டியை வாகனத்தில் ஏற்றி வைத்து, பிரசாரம் செய்தனர். அப்போது, ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் எனக் கூறி பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி 47வது வார்டில் தேசியக்கொடியுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பாண்டியராஜன் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தமிழகத்திற்கே தலைகுனிவு - ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிறார், திமுக முதன்மை செயலர் துரைமுருகன்!*

🔵🔵🔵டெல்லியில், முதல்–மந்திரிகள் பங்கேற்ற ‘மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் 11–வது நிலைக்குழு கூட்டம்’ நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘மக்கள் அனைவரும் குறுகிய குழு மனப்பான்மையை கைவிட்டு, தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற பொதுவான விருப்பம் எல்லோரிடமும் இருக்கிறது. அமைதியும், நிலைத்தன்மையும் இருக்கும்போதுதான் செழுமை ஏற்படும்’ என்று கூறினார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔴119 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு!*

அடுத்த சில தினங்களுக்கு ஆந்திர மாநிலம், திருப்பதி சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க திருப்பதி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

*☀சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இயல்பை விட வெயிலின் அளவு அதிகரித்து காணப்படும்!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here