தமிழ் இணைய செய்திகள்
18/04/2017
#*-தமிழத்தில் நிலைமாறும் அரசியல்-*#
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு வேலை ரகசியமாகவும் விருவிருப்பாகவும் நடைபெறுகிறது. எந்த காரணத்திற்காக அதிமுக இரண்டு அணியாக பிரிந்ததோஅந்த நோக்கம் நிறைவேறாமலே ஒன்றாக இணைவது அதிமுகவின் அடிப்படைத்தொண்டனை முட்டாளாக மாற்றும் செயல் என கருதுகின்றனர்.ஓபிஎஸ் சை நம்பியவர்கள் கதி என்னவாகும் என்ற பதற்றத்துடன் தொண்டர்கள் உள்ளனர்.ஜெ.ஜெயலலிதாவின் இறப்பு பற்றிய சந்தேகம் தீர்ந்ததா? என ஓபிஎஸ் சை பார்த்து அடிமட்டத் தொண்டன் கேள்விகேட்பது நியாயமானதுதானே......
*டெல்லியில் 36வது நாள் போராட்டத்தின் போது வெயில் கொடுமை தாங்காமல் தமிழக விவசாயி ராஜ்குமார் மயங்கி விழுந்தார்..!*
*டெல்லியில் தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம்.*தமிழ் இணைய செய்திகள்
_டெல்லியில் தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடியை போன்ற புகைப்படம் அணிந்த நபர் விவசாயிகளை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் செய்கின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 36வது நாளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
*நம்பிக்கை தீர்மானத்தின் போது எம்.எல்.ஏ.க்களை மிரட்டவில்லை: முதல்வர் பழனிசாமி மனு.*
_நம்பிக்கை தீர்மானத்தின் போது எம்.எல்.ஏ.க்களை மிரட்டவில்லை என முதல்வர் பழனிசாமி பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி வெற்றி பெற்றத்தை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கொடறா உத்தரவிட்டதாக கூறியுள்ளார்._
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு*
*சின்னத்தை பெற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திராவை 10 நாள்களாக கண்காணித்து வந்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தகவல்* http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக