தமிழ் இணைய செய்திகள்
23/04/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*ஆனந்தவிகடனின் நம்பிக்கை விருது பெற்ற தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு தமிழ்இணைய செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்
*💴💴💴டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் 15 பேர்க்கு நடிகர் பிரசன்னா சிநேகா நிதியுதவி*
பதிவு செய்த நேரம்:2017-04-23 15:16:54
சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் 15 பேருக்கு நடிகை சிநேகா, நடிகர் பிரசன்னா நிதியுதவி அளித்துள்ளனர். சென்னையில் விவசாயிகள் 15 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔷🔷🔷பிரிட்டனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்*
பதிவு செய்த நாள்: ஏப் 23,2017 15:25
லண்டன்: பிரிட்டனில் தங்கி இருந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கிருந்து வெளியேறுவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு வேலை என்றால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியர்களுக்கு சொர்க்கபூமியாக இருப்பது பிரிட்டன் தான். ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக அங்கு குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்த பிறகு பல ஆண்டுகளாக அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள், இனிமேல் அங்கு காலம் தள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்து, தானாகவே அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டில், 5,365 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அந்த ஆண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையில், இது, 22 சதவீதமாகும்.
இதற்கு மேல் அங்கு தங்கினால், வேலை கிடைக்காது, வங்கி கணக்கு துவக்க முடியாது, டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காத நிலை உள்ளிட்ட பல சேவை வசதிகள் கிடைக்காது என்பதால் தான் இந்தியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், இயாலிங் சவுதால் என்ற தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்.பி., வீரேந்திர சர்மா கூறினார்.
*🔫🔫🔫பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் போஹோல் தீவுக்கு சுற்றுலா வந்த பயணிகளை கடத்த முயன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.*
🌍🛰_* *_டெல்லியில் லல்லு குடும்பத்தினருக்கு ரூ.115 கோடி பினாமி சொத்து: பா.ஜனதா தலைவர் குற்றச்சாட்டு_*
🔵 _பீகார் மாநில பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுசில்குமார் மோடி இது தொடர்பாக பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-_
🔵 _மும்பையில் செயல்படுவதாக கூறப்படும் ஏ.பி. ஏற்றுமதி நிறுவனத்தை பினாமி பெயரில் பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.115 கோடி மதிப்பிலான சொத்து டெல்லியில் இருக்கிறது. ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது._
🔵 _அசோக்குமார் பாந்தியா பெயரிலான ஏ.பி. ஏற்றுமதி நிறுவனம் மும்பையில் உள்ள 5 வைர வியாபாரிகளிடம் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.5 கோடியை வட்டியில்லா கடனாக பெற்றுள்ளது. பின்னர் அந்த பணத்தின் மூலம் பாந்தியா டெல்லியில் உள்ள நியூபிரெண்ட்ஸ் காலனி 800 சதுர மீட்டர் நிலத்தை 2007-08-ல் ரூ.4.99 கோடிக்கு வாங்கியது._
🔵 _அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.55 கோடியாகும். அங்கு தற்போது ரூ.60 கோடி மதிப்பில் 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது._
🔵 _இந்த நிறுவனத்தின் இயக்குனராக லல்லுவின் மகனும், பீகார் துணை முதல்- மந்திரியுமான தேஜஸ்வி பிரசாத் கடந்த 2011-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மேலும் அவருடைய மூத்த சகோதரரும், பீகார் மந்திரியுமான தேஜ்பிரதாப் அந்த நிறுவனத்தின் இயக்குனராக 2014-ம் ஜூனில் நியமிக்கப்பட்டார்._
🔵 _தற்போது அவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகிக்கவில்லை. லல்லு பிரசாத் யாதவின் மகள்களான சாந்தா யாதவ், ராகினா லல்லு ஆகியோர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக தற்போது உள்ளனர். ஆனாலும் 98 சதவீத பங்குகள் தேஜஸ்வி பிரசாத் கைவசமே உள்ளன._
🔵 _இந்த விவகாரத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மவுனம் காக்கிறார். லல்லு பிரசாத் யாதவ் குடும் பத்தினரின் பினாமி சொத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்._
🔵 _இவ்வாறு சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார்._
🔵 _அவர் இது தொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டார்._
_இந்த குற்றச்சாட்டை ராஷ்ட்ரீய ஜனதா தளம் மறுத்துள்ளது._
🔵 _இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர் பாளர் மிருத்யுசஞ்சய் திவாரி கூறும் போது, “பாரதீய ஜனதாவில் சுசில்குமார் மோடி ஒரம் கட்டப்பட்டுள்ள காரணத்தால் அவர் லல்லு குடும்பத்தினர் மீது குறை கூறி ஆதாயம் தேட முயல்கிறார்” என்றார்._
⭕ *_நிதி உதவி_*
🔵 _கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10 பேருக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினர் பிரசன்னா - சினேகா தம்பதியர்...._
🔵 _விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்: நடிகர் பிரசன்னா.._
தமிழ் இணைய செய்திகள் சார்பாக நடிகர் பிரசன்னாவிற்கு நன்றி
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
⭕ *_ஆளுநர் கிரண்பேடி பேட்டி_*
🔵 _புதுச்சேரி முதலமைச்சர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகிறார்: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.._
*🔵🔵அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் நாட்டை தலைமையேற்று நடத்த முடியாது என பிரபல உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்*
*திமுகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக ஆதரவு இல்லை*
*அரசியல் நோக்கத்தோடு போராட்டம் நடத்தப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு*
*காவிரி பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்றும் ராமதாஸ் சாடல்*
*🤝🤝🤝முதல்வர்கள் இணைந்து செயல்படுங்கள்:பிரதமர்*
மாற்றம் செய்த நாள்: ஏப் 23,2017 15:40
புதுடில்லி:அனைத்து முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும் என பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. 3வது முறையாக இந்த கூட்டம் நடந்தது. இதில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: புது இந்தியா உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயோக் செயல்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்கள் இதில் உள்ளனர். மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும். ஜிஎஸ்டி மசோதா, ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
🔴🔴 தமிழ் இணைய செய்திகள்
*நிதி அமைச்சர் பதவியை ஓபிஎஸ்க்கு வழங்க தயாராக இருக்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமார்*
*எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்*
*ஓபிஎஸ் தரப்பினர் நாளை பேச்சுவார்த்தை நடத்த வரலாம்: அமைச்சர் ஜெயக்குமார்*
*6 மாதம் இல்லை, 60 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்*
*கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம்: அமைச்சர் ஜெயக்குமார்*
*சேத்துப்பட்டு ஏரி பகுதியில் ரூ.6 கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்*
🔴🔴 #மாஃபா க. பாண்டியராஜன் தகவல்*
*அதிமுக இணைப்புக்காக நாளை மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை- மாஃபா க. பாண்டியராஜன் தகவல்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக