- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

     தமிழ் இணைய செய்திகள்

           23/04/2017
              ஞாயிறு

* சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமவேலைக்கு சமஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.

*அவுஸ்திரேலியாவை அழிப்போம்: மூன்றாம் உலக போர் தொடங்கும்! மிரட்டல் விடுக்கும் வட கொரியா*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை அவுஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது.
இதை அவுஸ்திரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் தொடர்ந்தால் அவுஸ்ரேலியா மீது அணுகுண்டு வீசுவோம் என கூறப்பட்டுள்ளது.
இது நடந்தால் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலை மையம் Opera House தகர்க்ப்படும்.
இந்த தாக்குதல் மூலம் மூன்றாம் உலக போரை ஆரம்பிப்பது வட கொரியாவின் திட்டம் என நம்பப்படுகிறது.
இதனிடையில், வட கொரியாவின் அணுகுண்டு அனுகுமுறை நம் பிராந்தியத்திற்கு ஏற்கத்தக்கது அல்ல என அவுஸ்ரேலியா வெளியுறவு துறை அமைச்சர் Julie Bishop இரு தினங்களுக்கு முன்னர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

🍁🍁*_கரூர் மாவட்ட வளர்ச்சிக்கான எந்த திட்டத்தையும் தம்பிதுரை செயல்படுத்தவில்லை: செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு_*தமிழ் இணைய செய்திகள்

கரூர்: கரூர் மாவட்ட வளர்ச்சிக்கான எந்த திட்டத்தையும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செயல்படுத்தவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கரூர் மாவட்டத்துக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு தம்பிதுரையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தடையாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக எம்.பி.யாகும், 3 ஆண்டுகள் மக்களவை துணை சபாநாயகராகவும் உள்ள தம்பிதுரை இதுவரை மத்திய அரசின் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்பது அவரது புகாராகும். 

மாநில அரசின் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார். அரசு மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் எம்.பி.தம்பிதுரை மீது முன்னாள் அமைச்சர் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*_விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு புதுச்சேரி வணிகர்கள் ஆதரவு_*

புதுச்சேரி: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடத்தவுள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரி வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. 

*_அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தாக்கியதாக தினகரன் ஆதரவாளர் 4 பேர் கைது_*

திருச்சி: திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தாக்கியதாக வந்த புகாரியை அடுத்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் நாகராஜன் உட்பட 4 பேர் என தெரியவந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*_விவசாயிகள் போராட்டம்: மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பங்கேற்பு_*

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடத்தவுள்ள போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பங்கேற்க உள்ளார். முன்னதாக சென்னையில் நடக்க உள்ள போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து திருவாரூரில் பங்கேற்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. 

*_✴விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தவுள்ள போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை ஆதரவு_*

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடத்தவுள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 60 லட்சம் வணிகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டத்திலும் வணிகர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

*_✴🇮🇳✴தமிழகத்தில் ஏப்ரல் 25-ல் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது: அமைச்சர் செங்கோட்டையன்_*

ஈரோடு: தமிழகத்தில் ஏப்ரல் 25-ல் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

*_மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 27ம் தேதி பாமக போராட்டம்_*தமிழ் இணைய செய்திகள்

சென்னை: சாலைகளின் வகைகளை மாற்றி மதுக்கடை திறப்பதை கண்டித்து வரும் 27ம் தேதி பாமக போராட்டம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளில் மீண்டும் திறக்க கூடாது என அறிக்கை விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமியின் அரசு மக்கள் நலனுக்கான அரசு இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

 
கொண்டாட வேண்டாமா இந்த இளைஞனை ?

கருர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிறந்த முஹம்மது ரிஃபாக் ஷாருக் !

தற்போது 12 ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள் விர்ஜீனியா ஏவு தளத்தில் இருந்து எஸ் ஆர் 4 ராக்கெட் மூலம் ஜுன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது

உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தேர்வான 80 பேரில் இவர் ஒருவர் மட்டுமே இந்தியர்

64 கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள் முழுவதும் 3டி பிரிண்ட் தொழில் நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் உருவாக்கிய இந்த மாணவர் அதற்கு வைத்துள்ள பெயர் "கலாம்சாட்"

தமிழ் இணைய செய்திகள சார்பாக முஹம்மது ரிஃபாக் ஷாருக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here