கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது
அப்போது
தோழர் லீலாவதி
வில்லாபுரம் பகுதியின் வார்டு கவுன்சிலர்
தண்ணீர் கடும் பற்றாக்குறை
குடிநீரை காசுக்கு விற்பனை செய்த
கருங்காலிகளை எதிர்த்த காரணத்தினால்
முதுகில் குத்தியே பழக்கப்பட்ட
அரசியல் கட்சியின் ரவுடியால்
பின்னிலிருந்து கொடும் வீச்சரிவாள் கொண்டு
வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்
குடிநீர் திருடுபடாமல் காக்க
எம் தாய்
செந்நீர் சிந்திய நாள் இன்று
அந்தக் கருங்காலி
பின் அமைந்த தனது தலைமையின் அரசால்
தண்டனை காலம் முடியும் முன்பே
அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டார்
வீரத்தாய் லீலாவதி புகழ் ஓங்குக
நீதிக்காக போராடி வீழ்ந்தாய்
நிற்காது உன் பயணம்
வீரவணக்கம் தாயே!http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக