காலை செய்திகள் 12/05/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 12/05/2017

தமிழ் இணைய செய்திகள்

    13/06/2017

    http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*#முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்*

*ராம்கோ நிறுவன அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்*ணௌ
தமிழ் இணைய செய்திகள்
*ராம்கோ நிறுவன அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாவின் மறைவு தொழில் உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முதலமைச்சர் பழனிசாமி*

*பல்வேறு தொழில் நிறுவனங்களை தொடங்கி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியவர் ராம்கோ நிறுவன அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா: முதல்வர் பழனிசாமி*

*மதுக்கடைகளை மூட 7வயது சிறுவன் கோரிக்கை*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
_தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடும் வரை தனது போராட்டம் தொடரும் என‌ மது ஒழிப்பிற்காக தன் சின்னக் குரலில் சீற்றம் காட்டுகிறான் 7 வயது சிறுவன் ஆகாஷ்._

_இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆகாஷ், காஞ்சி மாவட்டத்தில் உள்ள படூரில் கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதிகமான கல்லூரி மாணவர்கள் மது அருந்துவதாக தெரிவித்துள்ளான். இதன் காரணமாக சிலர் பெண்களிடம் தகராறு செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான். படூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கோரிய ஆகாஷ், அதுவரை தனது போராட்டம் தொடரும் என்று கூறியிருக்கிறான்._

*_✴🇮🇳✴விருதுநகரில் பாலத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு_*

விருதுநகர்: விருதுநகர் அருகே பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கணேசன், ஜமீலா ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்துள்ளன

போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு..,

நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.  தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

*💳💳💳‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி - வருமான வரித்துறை அறிமுகம்*

ஆன்லைன் மூலம் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைக்கும் புதிய வசதி ஒன்றை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ் இணைய செய்திகள்
புதுடெல்லி:

வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்கும் புதிய வசதி ஒன்றை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக வருமான வரித்துறையின் https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளத்தின் ‘முகப்பு’ பக்கத்தில் புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய முறைப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு, இருவித எண்களுடன் (பான் மற்றும் ஆதார் எண்கள்) ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற சரியான பெயரும் இருத்தல் அவசியம் ஆகும்.தமிழ் இணைய செய்திகள்

இந்த முறையில் விவரங்களை செலுத்தியவுடன் விண்ணப்பதாரரின் விவரங்களை ‘உடாய்’ (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) சரிபார்த்து ஏற்றுக்கொள்ளும்.

எனவே பிறந்த தேதி, பாலினம், பான் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை எந்தவித வேறுபாடும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது சிறிய வேறுபாடுகள் இருப்பின் ஆதார் தொடர்பான ஒருமுறை கடவுச்சொல் (ஒன்-டைம் பாஸ்வேர்டு) தேவைப்படும். இது விண்ணப்பதாரரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த முறைப்படி வருமான வரி செலுத்துவோர் மற்றும் தனிநபர்கள் யாரும், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம் என வருமான வரித்துறை கூறியுள்ளது. 

*🛳🛳🛳சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு*

நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது.

📷📷📷சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 ரெயில் நிலையங் களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் : ரெயில்வே அதிகாரி.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🔷🔷பள்ளி பொதுத் தேர்வில் ரேங்க் முறை ஒழிப்பு: மூத்த கல்வியாளர்கள் வரவேற்பு*

*🔶🔶சோனியா உடல் நிலையில் முன்னேற்றம்: விரைவில் 'டிஸ்சார்ஜ்'*

*டில்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு*

*⚫⚫உத்தரப் பிரதேசத்தில் கார் மீது டிரக் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு*

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here