உடல் கழிவுகளை அகற்ற ஒருவாரம் பழவிரதம்
இரவு நேர வேப்பம் பூக்களின் மணம் கோடையை அறிவிக்கிறது. தர்பூசனிப் பழங்கள், ஆரஞ்சுப் பழங்கள், நெல்லிக்காய், முலாம்பழங்கள், விதவிதமான வாழைப் பழங்கள், பப்பாளி, கொய்யாப் பழம் போன்றவற்றை சந்தைகளில் குவித்து வைத்து விற்பதைப் பார்க்கிறோம். கோடை தனது நன்மைகளைத் தர வந்துள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
உடலில் உள்ள கழிவுகளை அகற்ற கோடையே சிறந்தது. பழங்களை உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறைந்த அளவு சமைத்த உணவு, அதிக அளவில் பழ உணவு என்பதை கைக்கொள்ளுங்கள்.
இளநீர், நுங்கு, பதநீர், போன்றவற்றைப் பருகத் தயங்காதீர்கள். உப்பில்லாமல் எலுமிச்சைச் சாற்றை நீருடன் கலந்து பருகுங்கள். பனைவெல்லம், கருப்பட்டி, தேன் போனறவற்றை இனிப்புக்காகப் பயன்படுத்துங்கள். கருப்பஞ்சாற்றை சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடிக்கப் பழகுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு வகையான பழங்களை உண்ணுங்கள். கழிவுகளை வெளியேற்ற இதுவே சிறந்த வழி. ஞாயிறு தேங்காய் வாழைப்ப பழங்கள். திங்கள் ஆரஞ்சுப் பழங்க்ள், செவ்வாய் பப்பாளி, புதன் தர்பூசனி, வியாழக் கிழமை கொய்யாப் பழம், வெள்ளி மாம்பழம் அல்லது அன்னாசிப் பழம், சனிக்கிழமை மீண்டும் தேங்காயும் வாழைப் பழங்களும்.
பழவிரதம் துவங்குவோம். முற்றிலும் ஒரு வாரம் சமைத்த உணவுகளைத் தவிர்ப்போம். கழிவுகளை ஒரு வாரத்தில் முற்றிலுமாக அகற்றுவோம்.
எவ்வளவு பழங்களை வேண்டுமானாலும் உண்ணலாம். பசியடங்கும் வரை பழங்களை உண்ணலாம். இடையே எலுமிச்சைச் சாறு தேன் கலந்தது, நெல்லிக்காய், பேரிச்சை, அத்தி போன்றவற்றையும் உண்ணலாம். வசதி வாய்ப்பள்ளவர்கள் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றற்றையும் இடைஇடையே உண்ணலாம்.
ஆனால் இந்த ஒரு வாரம் சமைத்த உணவுகளை உண்ணக் கூடாது.
தோழர்களும் இயற்கை உணவை முயற்சித்துப் பாருங்கள். தினமும் உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக