தமிழக அரசிற்கு ரூ. கோடி அபராதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக அரசிற்கு ரூ. கோடி அபராதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

*தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்*

_முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._

_முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பட்ட மேற்படிப்புக்கு இடங்கள் கிடைப்பதில்லை என்று மருத்துவ மாணவர்கள் காமராஜ் மற்றும் சாரோன் ஆகிய இருவரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு கிருபாகரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்._
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
_கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து பெறுவது தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அலட்சியமாக செயல்பட்டதாக கண்டனம் தெரிவித்ததோடு, தலா ரூ.1 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்._

_தமிழக அரசுக்கு விதித்த ரூ.1 கோடியை கீழடி அகழவாராய்ச்சி பணிக்கு வழங்கவும், மருத்துவ கவுன்சில் வழங்க வேண்டிய ரூ.1 கோடி அபராதத்தை மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்திற்கு வழங்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்._

_மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது._

_முன்னதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான இறுதி விசாரணையின் போது கேட்ட கேள்விக்கு தமிழக அரசு அளித்த பதில் மனுவில், முதுநிலை மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மருத்துவக் கவுன்சில் விதிகளை பின்பற்றியே விதிமுறைகளை வகுத்திருப்பதாகவும், 50 சதவிகித இடங்களை மாநில அரசே நிரப்பலாம் என மருத்துவக்கவுன்சில் அனுமதித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாமல் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை தனி நீதிபதி ரத்து செய்துவிட்டதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது._

_முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு கட்டாயமாக்கியது. அதன்படி ஒவ்வொரு வருடமும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களது முதுகலை மருத்துவ சேர்க்கை இடங்களிலிருந்து 50 சதவீதத்தை அரசுக்கு அளிக்க வேண்டும். அரசு இடஒதுக்கீட்டின் படி பொது நேர்காணல் மூலம் இந்த இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். கட்டாயமாக்கப்பட்ட இந்த உத்தரவை கடந்த 16 வருடங்களாக சரிவர நடைமுறைபடுத்த தவறியதாலேயே தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது_

_இன்று வந்திருக்கும் இந்த தீர்ப்பு, முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு மட்டுமே, இது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ். இல் சேரும் மாணவர்களுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வின் படி நிரப்பப்படுமானால் அந்தக் கலந்தாய்வும் நடக்காமல் போக வாய்ப்புண்டு._ http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here