🍎 100 மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை திட்டம் புதுமை!
🥀 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பயன்!!
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டம், தமிழகத்தின், நான்கு
மாவட்டங்கள் உட்பட, நாடுமுழுவதும், 100 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
🥀 'நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, தேசிய சுகாதார கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
🥀 அதன் ஒரு கட்டமாக, நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
🍏 புற்று நோய்
🥀 அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும், 'டயாபடீஸ்' எனப்படும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் மார்பக, வாய், கர்ப்பப் பை புற்றுநோய்கள் குறித்த பரிசோதனைகள் செய்யும் திட்டத்தை, 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செய்ய, 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
🥀 தமிழகத்தின் புதுக்கோட்டை, பெரம்பலுார், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
🍅 இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
🥀 சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோர்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நோய்களால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, இந்த மருத்துவப் பரிசோதனை செய்யும் முறை கொண்டு வரப்படுகிறது.
🥀 நோய்களால் உயிரிழப்போரில், 52 சதவீதத்தினர், இந்த ஐந்து நோய்களால் உயிரிழக்கின்றனர்.
🍊 தேவையான சிகிச்சை
🥀 அதை குறைக்கும் வகையிலான இந்த மருத்துவப் பரிசோதனை, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செய்யப்படும். மக்கள் தொகையில், 38 சதவீதத்தினர் இதன் மூலம் பலன் பெறுவர்.
🥀 உலகின் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை திட்டமாக இது விளங்குகிறது. நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தேவையான சிகிக்சையும் அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
🍅 திட்டம் ஏன்?
🥀 இந்த திட்டம்கொண்டு வரப்படுவது குறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:•
🥀 கடந்த, 30 ஆண்டுகளாக, சர்க்கரை நோய் மிகவும் வேகமாகவும் பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
• சர்க்கரை நோயால், கடந்த, 2005ல், 2.24 லட்சம் பேர் உயிரிழந்தனர்; 2015ல் இது, 3.46 லட்சமாக உயர்ந்துள்ளது
• கடந்த, 2015 புள்ளி விபரங்களின்படி, ஏழு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது
• கேன்சர் எனப்படும் புற்றுநோய்களில், மார்பகம், வாய், கர்ப்பப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 34 சதவீதமாக உள்ளது. கடந்த, 2012ல், மார்பக புற்றுநோயால், 70 ஆயிரத்து, 218 பேர் உயிரிழந்தனர்; 1.45 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் தாக்கியுள்ளது
• கர்ப்பப் பை புற்றுநோயால், சராசரியாக, ஆண்டுக்கு, 67 ஆயிரத்து, 500 பெண்கள் உயிரிழக்கின்றனர்; 1.23 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்
• வாய் புற்றுநோயால், ஆண்டுக்கு, 52 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்; 77 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக