🍎 வெங்காய குடோனான பள்ளிகள்
🍏வியாபா ரியாக மாறிய ஆசிரியர்கள்!!!
🥀 மத்திய பிரதேசத்தில், வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், அரசுப் பள்ளிகள் குடோன்களாகவும், ஆசிரியர்கள் வியாபாரிகளாகவும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
🥀ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். மாநிலத்தில் இந்த ஆண்டு விவசாய உற்பத்தி பொருட்கள் அதிகம் விளைந்துள்ள நிலையில்,
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் இணைய செய்திகள்
🥀இதை
யடுத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
🍅 போராட்டம் முடிவு
🥀 இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதில், சில விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் இருந்தார்.
🥀 விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் சவுகான் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
🍊 நிலைமை குறித்து வருத்தம்
🥀 இந்நிலையில், அதிகப்படியாக விளைந்துள்ள வெங்காயத்தை, விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது;
இதை, அரசுப் பள்ளிகளில் இருப்பு வைத்து, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு சாரா நிறுவனங்களிடம் விற்பனை செய்யவும், மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
🥀 இதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை கண்காணித்து, கற்றல், கற்பித்தல் நடைமுறைகளை மேலும் சிறப்பிப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும், ஜன் சிக் ஷா கேந்திராக்களில், வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
🥀 இவற்றை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் இணைய செய்திகள்
🥀 வெங்காயம் இருப்பு வைப்பு கணக்கு மற்றும் அதன் விற்பனை பணியில் ஈடுபட்டுள்ள, ம.பி., அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக