_31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவியை கண்காணிப்பதற்காக கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி - சி38 ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 28 மணி நேர கவுன்டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. மேலும் வர்த்தக ரீதியாக ஆன்ட்ரிக்ஸ் மூலம், கார்டோசாட் - 2 செயற்கைக்கோளுடன் துணை செயற்கைக்கோளாக 29 நானோ வகை செயற்கைக்கோள்களும், தமிழகத்தில் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு நானோ செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது._
_தாவது புவியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும், இந்தியாவை சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள், புவியை கண்காணிக்கவும், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காவும் செலுத்தப்படுகிறது. அதேநேரத்தில், இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைகோள், ஜூன், 19ம் தேதியுடன், 1,000 நாட்களை கடந்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது._
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக