தேவர் என்ற சொல் யாருக்கு ? ? ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தேவர் என்ற சொல் யாருக்கு ? ? ?

"தேவர் " என்கின்ற சொல்லும்  முக்குலத்தோர்
சாதி அரசியலும் ..!!!

முக்குலத்தோர் என்பவர் யார்?

இவர்கள்  ஏன்  சீக்கிய  மதத்தை  உருவாக்கிய  குருநானக் தேவரை  இவர்கள்  சாதி என்று  கூறுவதில்லை ..

பெரிய  மருது /சின்ன  மருதுவை  தேவர்  என்கின்றவர்கள் ....

சிவகங்கை  சீமையை  ஆட்சி  புரிந்த  (பாளையப்பட்டுக்கள் )  வடுகநாத  தேவரை  இவர்கள்  ஏன்  சொந்தம்  கொண்டாடுவது  இல்லை ..

ஏனென்றல்  வடுகநாத தேவர்   தெலுங்கர் .. மற்றும்  நாயக்க  சமூகத்தை  சார்ந்தவர் ..

கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
   

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மறவர்,கள்ளர் மற்றும் அகமுடையர் (சேர்வை) என்ற வேறுபட்ட மூன்று இனத்தாரும் தாங்களை இந்திரனுக்கு அகலிகை மூலம் தவறான வழியில் பிறந்தவர் என்றும், இந்திரனுக்குப் பிறந்ததால் தாங்கள் ‘தேவர்’ என்றும், அதன் அடிப்படையில் தாங்கள் முக்குலத்தார் என்பதாகவும் கூறிக் கொள்கின்றனர் (பூவிந்திர புராணம்). ‘தேவர்’ என்ற பட்டத்தின் காரணத்தால் தாங்கள் மூவேந்தர் வம்சாவழியினர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இது உண்மையா?

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மூவரும் சகோதரர் எனவும், அதனால் முக்குலத்தார் எனவும் அறியப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

  தேவர் என்பது அரசன், மதகுருமார் மற்றும் கடவுள் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல்லாகும். தேவர் என்ற சொல்லிற்கு கடவுள் அல்லது தெய்வம் எனப் பொதுவாகப் பொருள் கொள்கின்றனர். அதனை தலைவன் எனக் ‘கால்டுவெல்’ குறிப்பிடுகிறார் (கால்டுவெல், திருநெல்வேலி சரித்திரம், பக்கம் 52-53). தேவர் என்ற பட்டமானது தற்காலத்தில் மறவர் என்று காட்டப்படுகின்ற இனத்தைச் சார்ந்த சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது உண்மையே. 17 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து உள்ள கல்வெட்டுக்களில் இவர்கள் ‘சேதுபதி காத்த தேவர்’ என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், அதற்கு முன்பு அப்படி இருந்ததற்கு நிச்சயமாக ஆதாரம் இல்லை.

  இந்த ‘தேவர்’ என்ற சொல்லைப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் பயன்படுத்துகின்ற வழக்கம் சங்ககாலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது. (பார்க்க: 'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும் )  ஆனால், அக்காலத்தில் இது ஒரு குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்தவர் பயன்படுத்துகின்ற பட்டமாக இல்லை. அதனடிப்படையில் பல புலவர்கள் இப்பெயர் பெற்றிருந்தனர்.

     (எ.கா) பெருந்தேவனார், ஈழத்துபூதன் தேவன், பூதன் தேவனார், வாயிலான் தேவன் மற்றும் தேவனனார். இவர்கள் யாவரும் வெவ்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த பிற்காலச் சோழ மன்னர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் தேவர் என்று பெயரிட்டுக்கொண்டனர். இக்காலத்திலும் இது குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கான பட்டமாக இல்லை
.
    (எ.கா) பொன்மாளிகை துஞ்சிய தேவர், இராசராச தேவர், சுந்தரபாண்டியத் தேவர் மற்றும் குலசேகர பாண்டியத் தேவர்.

பொதுவாக பேரரசர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்த தளபதிகளும் மற்றும் குறுநில மன்னர்களும் தங்களது முதன்மை மற்றும் அதிகாரத்தைக் காட்டுகின்ற வகையில் ‘தேவர்’ என பட்டம் சூடிக்கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் என்பவன் சுந்தரபாண்டியத் தேவர் என அழைக்கப்பட்டான். ஆனால், அவனுடன் பிறந்த அவனது மற்ற சகோதரர்கள் ‘தேவர்’ என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளவில்லை. எனவே, இடைக்காலத்தில் தேவர் என்ற பட்டம் தனிநபர் சார்ந்த பட்டமாக இருந்ததேயன்றி ஒரு சாதி சார்ந்த பட்டமாக இல்லை என்பதே உண்மை.

பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், கண்டவர்கள் எல்லாம் இந்த தேவர் பட்டத்தை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டனர். இதற்கு ‘கண்டராதித்த தேவன்’ என்ற பெயர் கொண்ட ஒரு தாசியின் மகனைக் குறிப்பிடலாம். சில காலத்திற்கு முன்பு வரை கள்ளிக்கோட்டை வெள்ளாளர்களுக்கும் தேவர் என்ற பட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பக்கம் 89).

     பிற்காலச்சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு தமிழகத்தில் தமிழ் பேசாத இனத்தவரே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ஒரு சில கள்ளர், மறவர் இனக்குழுக்கள் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். அந்நிலையில், தேவர் என்ற பட்டத்தினை தங்களை முதன்மைப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தி இருக்கலாம். (இரா.சுந்தரவந்தியத்தேவன் ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்’ பக்கம் 142). இதன் அடிப்படையில், சேதுவின் பதியாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தைப் பாதுகாக்கும் கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் சொல்லாக இந்த ‘தேவர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா?

     கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்திய சேதுபதி மன்னர்களாகிய தற்கால மறவர் என்ற இனத்தைச் சார்ந்தவர், ‘தேவர்’ என அழைக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சேதுபதி வரலாற்றை ஆராய்ந்த முனைவர் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘சேதுபதியின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து அதாவது, கி.பி 1601 லிருந்து முரண்பாடு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்கள் முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரைக் கிடைக்கவில்லை’ என்கிறார். மேலும் ‘முதல் சேதுபதி மன்னராகச் சுட்டப்படுகின்ற (கி.பி.1603) உடையான் ரெகுநாத சேதுபதி மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும், அவர் சேதுபட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை’ எனவும் குறிப்பிடுகிறார் (எஸ்.எம்.கமாலின் ‘சேதுபதிகள் சரித்திரம்’ பக்கம் 9). அப்படியெனில், கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் இருந்தார்களா?

அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் தற்கால மறவர்களின் முன்னோர்களா? இல்லையா?  அல்லது அப்போதைய சேதுபதி மன்னர் என்போர் வேறு இனத்தைச் சார்ந்தவர்களா? அவர்களுக்கும் ‘தேவர்’ என்ற பட்டம் இருந்ததா? என்ற விவரங்கள் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தேவர் என்ற பட்டம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு காலத்திய மறவராகிய சேதுபதி மன்னர்களை, ‘தேவர்’ என்ற பட்டத்தின் மூலம் இடைக்காலத்திய தமிழ் மூவேந்தர்களுடன் நிச்சயமாகத் தொடர்புபடுத்த முடியாது. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் ‘தேவர்’ என்று பட்டம் போட்டுக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

     இதற்கிடையில், தேவர் என்ற சொல் பற்றி ஆராய்ந்த அந்தோணிசாமி நாடார் அவர்கள், ‘தெவ்வர்’ என்ற சொல்லிற்குப் பகைவன், கொடியவன் எனப் பொருள் எனவும், மறவர் போன்ற இனக்குழுக்கள் முரட்டு சுபாவம் உடையவராக, குடிமக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவராக இருந்ததால் அவர்கள் அமைதியான குடிகளுக்குப் பகைவர்களாகக் கருதப்பட்டனர். அதனால், அவர்கள் தெவ்வர் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் தேவர் என மருவியதாகக் கூறுகிறார் (அந்தோணிசாமி நாடார், சான்றோர் வரலாறு, பக்கம் 138).

     மேலும், மறவர்களின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்த திரு, ஆர்.சத்தியநாத அய்யர் அவர்கள் ‘மறவர் தலைவனின் தலைநகரமான பெரியபட்டணம் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவர்களது தொழில் கொள்ளையடித்தல் ஆகும்’ என்று கூறுகிறார் ( R.Satyanatha Ayyar, The History of Nayaks-page 322). எனவே, ‘குடிமக்களுக்குப் பகைவர்களான முரட்டு சுபாவம் கொண்ட ‘தெவ்வர்’ என்போரே ‘தேவர்’ ஆகி இருக்க வாய்ப்புண்டு’ என்ற முடிவு ஒத்துவருவதாக இருக்கிறது.

     அகமுடையார் என்ற சேர்வை இனத்தார்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சேதுபதி மன்னர்களிடத்தில் சேவைக்காரன் என்ற வகையில் கீழ்நிலை ஊழியம் செய்ததாகவே தெரிகிறது. அக்காலத்திய சேவைக்காரர்களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுபவர் மருது சேர்வைக்காரர்கள். இவர்கள் பற்றி முனைவர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுவது ‘மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் அந்தரங்கப் பணியாளர்களாகப் பணி புரிந்தனர். நாளடைவில் விதவையான சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கும், வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியாரது பலவீனத்தைப் பயன்படுத்தி, தாங்களே ஆட்சியாளர்களாக அவர்கள் இயங்கி வந்தனர். இதனை அறிந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வீரமறக்குடி வழியினரான தமது உறவினர் ராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேவைக்காரர்கள் ஆட்டிப்படைப்பதா? என்ற வேதனையும், சினமும் அடைந்தார். மேலும், ஆண் வாரிசு அற்ற சிவகங்கை சமஸ்தானத்தை தமது இராமனாதபுரம் சமஸ்தானத்துடன் இணைக்க விரும்பி, ஆற்காடு நவாப்பிற்கு சேதுபதி மன்னர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் சேதுபதி மன்னருக்கும், மருது சேர்வைக்காரருக்கும் பகை வளர்ந்தது. (எஸ்.எம்.கமாலின், ‘சேதுபதிகள் சரித்திரம்’ பக்கம் 239-247). இந்தக் காலக்கட்டத்தில் சேர்வைக்காரர் மற்றும் மறவர் ஆகியோருக்கு இடையே முக்குலத்தோர் என்ற பந்தம் ஏதும் நிச்சயமாக இல்லை. மேலும், மருது சகோதரர்கள் ‘சேர்வைக்காரர்’ என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘தேவர்’ என்று அழைக்கப்படவில்லை. அவர்களது இனத்தாரும் தேவர் என்று அழைக்கப்படவில்லை.

     அதே 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் எந்த சம்பந்தமும்  கிடையாது. உண்மையில் சேதுநாட்டில் கள்ளர்கள் கொள்ளை அடித்து அட்டூழியம் செய்ததும், அவர்களை சேதுபதி மன்னர்கள் தண்டித்ததுமே நடந்தது. இதுவும் சேதுபதி வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை கள்ளர் சகோதரர்கள் இருவரின் தங்கையான கத்தாயி என்ற காதலி நாச்சியாரை சேதுபதி மன்னர் இரண்டாம்தாரமாகத் திருமணம் முடித்த நிலையில், புதுக்கோட்டையின் உண்மையான தொண்டைமான் மன்னனைக் கொன்றுவிட்டு, தனது மைத்துனான கள்ளனை சேதுபதி மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னனாக்கினான். இப்படித்தான் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. இங்கேயும் மறவருக்கும், கள்ளருக்கும் முக்குலத்தோர் என்ற வகையில் உறவுமுறை இல்லை. கள்ளருக்கு தேவர் என்ற பட்டமும் இருக்கவில்லை. பிறகு எப்படி கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்போர் முக்குலத்தோர் ஆனார்கள்.?

கள்ளர் மற்றும் மறவர் என்போர் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், பொதுமக்களிடத்தில் கொள்ளை போன்ற அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசின் குற்றபரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்டனர். இதுவே கள்ளர் மற்றும் மறவர் என்போர் ஒன்றிணைய வழிவகுத்தது. இதற்கிடையில், மறவரின் கீழ் சேர்வைக்காரர்களாக இருந்த அகமுடையாரும் இவர்களுடன் இணைந்தனர். முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களான பள்ளர்களின் எதிர்ப்பை சமாளிக்கும்முகமாக மூன்று இனத்தாரும் ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட ஆரம்பித்தனர். இதுதான் ‘முக்குலத்தோர்’ அமைப்பு உருவான முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here