ரூ.10 லட்சம் மேல் வருவாய்? சமையல் காஸ் மானியம் பெற்றவர்கள் யார் யார்? ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரூ.10 லட்சம் மேல் வருவாய்? சமையல் காஸ் மானியம் பெற்றவர்கள் யார் யார்? ?

🍎ரூ.10 லட்சம் மேல் வருவாய்? சமையல் காஸ் மானியம் 'கட்!!!

🥀தமிழகத்தில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாயக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை, எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்த துவங்கியுள்ளன.

🥀பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் 
பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.

🥀 அதற்கு, சந்தை விலையில், காஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

🥀பின், மத்திய அரசு வழங்கும் சிலிண்டர் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில்
நேரடியாக வரவு வைக்கின்றன.

🥀 மத்திய அரசு, நிதி நெருக்கடியை சமாளிக்க, வசதி படைத்தவர்களை, மானியத்தை விட்டு தருமாறு வலியுறுத்தியது; அதை, பலர் ஏற்கவில்லை.

இதையடுத்து, தமிழகத்தில் ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல்வருவாய் ஈட்டுவோருக்கு, எண்ணெய் நிறுவனங்கள், சத்தம் இல்லாமல், மானியத்தை நிறுத்த துவங்கியுள்ளன.

🍅எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

🥀தமிழகத்தில், மூன்று எண்ணெய் நிறுவனங்களுக் கும், 1.72 கோடி வீட்டு சமையல் சிலிண்டர் வாடிக் கையாளர்கள் உள்ளனர்;

🥀அதில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டுவோரின் முழு விபரமும் கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின் அடிப்படையில், அரசு ஊழியர்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய்ஈட்டுவோருக்கு, மானியம் நிறுத்தப்பட்டு வருகிறது.

🥀அந்த விபரம், வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காததால், இது குறித்து, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

🍅தமிழகத்தின் 'ரேங்க்'

🥀நாட்டில், வசதி படைத்தவர்கள், தாங்களாகவே முன்வந்து, மானியத்தை விட்டு கொடுப்பதில், இதுவரை, 16.95 லட்சம் வாடிக்கையாளர் களு டன், மஹாராஷ்டிர மாநிலம், முதலிடத் தில் உள்ளது.

🥀இதை தொடர்ந்து, உ.பி., 12.66 லட்சம்; டில்லி, 8.02 லட்சம்; கர்நாடகா, 7.54 லட்சம்; தமிழகத்தில், 6.63 லட்சம் பேர், மானியத்தை தானாகவே ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here