- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒரு உதவிதொடக்கக்கல்வி அலுவலர் புதிதாக வரும்போது அந்த வட்டாரத்தில் உள்ள சில ஆசிரியர்கள். அவரைப்பற்றி அனைத்துவிவரங்களையும் சேகரித்து வாட்ஸ் ஆப் குரூப்பில் போடுகிறார்கள்....அவர் வயது அவர் குடும்பம் அவர் ஒரு விஐபின் உறவினர் என்றெல்லாம்...... சிலர் அந்த உதவிதொடக்கக்கல்வி அலுவலருக்கு வீடு பிடித்து தருவது முதல் தண்ணீர்கேன் கொண்டு போய் சேர்ப்பது வரை அனைத்து பணிகளும் செய்கின்றனர். உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு வாகனம் ஓட்டத்தெரியவில்லை என்றால் அவருக்கு இரு சக்கரவாகன ஓட்டுனராகவும் ஆகிவிடுகின்றனர்.சிலர் பணம் வாங்கித்தரும் ஏஜெண்டாகவும் கூட செயல்படுகின்றனர்.சிலர் அலுவலகப்பணிக்கு ஆளில்லை என்றால் இவர்களே இப்பணியும் செய்கிறார்கள். அந்த ஏ.இ.ஓக்கு வட்டாரம் வந்ததும் அனைத்து ஆசிரியர் விவரங்களை தருபவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களே!.............இதன் விளைவுகள் மிக கடுமையானது என்பது ஏ.இ.ஓவும் அறிவதில்லை..........ஏ.இ.ஓ வும் இப்படி ஆசிரியர்கள் சிலர்  செய்வதை பார்த்து  அவர்களுக்கும் ஒரு கர்வம் ஏற்பட்டு விடுகின்றது..............விளைவு ...........திருச்செங்கோட்டில் இரண்டு ஏ.இ.ஓக்கள் 2008 மற்றும் 2009 ல் பணிநீக்கம் ஒருவர்  இலஞ்ச புகாரில் இலஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு  10 ஆண்டுகளாகியும் இன்னமும் பணிக்கு திரும்பாத நிலை. மற்றொருவர் துறை ரீதியாக தற்காலிகப்பணிநீக்கம்...................நாமக்கல் மாவட்டத்தில்  ஒரு ஒன்றிய ஆசிரியை சர்வீஸ் புத்தகம் காணாமல் போய் அவர் தொடர்ந்து அந்த அலுவலத்தின் மீது இயக்குனர் வரை புகார் அளித்து வருகின்றார்.இராசிபுரத்தில் ஏழு எட்டு வருடங்களுக்கு முன் பள்ளிக்குச்செல்லாமல் அலுவலகப்பணி செய்துவந்த ஒரு ஆசிரியர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் அழைக்கப்பட்டு விசாரணை வளையத்தில் வந்துள்ளார்........................இப்படி நீளுகின்றது..............இத்தனைக்கும் காரணம் சில பள்ளிசெல்லா ஆசிரியர்களே.லஞ்சத்தை ஒழிப்போம்.. ஆசிரியர் மானம் காப்போம் ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here