நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்த விவசாயிகள் போராட்டத்தாலும், தக்காளி உற்பத்தி குறைந்ததாலும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் தக்காளி விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ஆசாத்பூர் மண்டியில் பல்வேறு வேளாண் கூட்டமைப்புகள் சார்பில், கடந்த வெள்ளிக் கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு கொட்டாரங்களை அகற்றக்கோரி கடந்த ஐந்து நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவிடம் இக்கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அதேபோல வடக்குப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான கனமழை பெய்துள்ளது. ஆசாத்பூர் மண்டிக்கு தக்காளி வரத்து 20 சதவிகிதம் குறைந்துள்ளது. இமாசல பிரதேசத்தில் இருந்து இந்த மண்டிக்கு 200 டன்னுக்கும் குறைவான அளவிலேயே தக்காளி வரத்து இருக்கிறது.
மேலும் 20 சதவிகித அளவுக்குத் தக்காளி அழுகிவிட்டதால் தற்போது பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர். வடஇந்தியாவைப் போலவே தமிழகத்திலும் தக்காளி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் வாங்கும் தக்காளியின் அளவைவிட ஆசிரியர்கள் குறைவாக வாங்குவதாக வணிகர்கள் கூறுகின்றனர்.இதனால் பெங்களூரில் 90 ரூபாய்க்கு விற்கும் தக்காளி இங்கு ₹ 80 க்கு விற்பனையாகிவருகிறது. தமிழகத்தில் ஊதியக்குழு அமைக்காததால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தக்காளி வாங்கி சமையல் செய்யமுடியாமல் திண்டாடிவருதாக வியாபாரிகள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக