சினிமா தொழிலாளர்களுக்கும் வழிகாட்டியான JACTTO-GEO - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சினிமா தொழிலாளர்களுக்கும் வழிகாட்டியான JACTTO-GEO

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு (பெப்சி) உட்பட்டு 24 சினிமா சங்கங்கள் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சினிமா தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். இந்த ஆண்டு அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நேரத்தில் பல படப்பிடிப்புகளில் தயாரிப்பாளர்களை மிரட்டி கூடுதல் சம்பளம் கேட்டு பெப்சி தொழிலாளர்கள் பிரச்சனை செய்வதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்புக்கும் இடையில் நேற்று (ஜூலை 25) சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பெப்சியை சேர்ந்த சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதோடு பேச்சுவார்த்தை என்ற பெயரில் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை பெப்சி அமைப்பு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவமானப்படுத்தும் அமைப்புகளை கண்டிக்காமல் இருக்கிறது. சில அமைப்புகள் அராஜமாக அவர்களே சம்பளத்தை நிர்ணயித்துக்கொண்டு தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கிறார்கள்.

இனிமேலும் தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்களை கைவிட முடியாது. பெப்சி அமைப்போ, தொழிலாளர்களோ தயாரிப்பாளர்களுக்கு எதிரிகள் அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவது தயாரிப்பாளரின் கடமை. அதேநேரத்தில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பளப்படி தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். மேலும் இன்று முதல் (நேற்று) தங்களுக்கு உடன்படும் யாருடனும் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலைசெய்யும்படி தயாரிப்பாளர்களை சங்கம் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக
பெரும்பாலான சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை போன்று நாமும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனக் கூறிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here