அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரியிருந்தார். மேலும் அந்த மனுவில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். ஆனால் அவரது ஆலோசனையின்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலா உடன் ஆலோசித்ததாக ஆளும் கட்சி வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது. ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஊழலுக்கு எதிரான சட்டங்களை அவமதிக்கும் செயல். எனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கவுல் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியதும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். ஒருவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது. அறிவுரை கூற தகுதியானவராக இருந்தால் அவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறு ஏதும் கிடையாது. எனவே சசிகலாவிடம் அவருடைய கட்சியினர் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக