இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை (ஜூலை 26)ஆம் தேதி தொடங்கியது. இதில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியின் வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 240 ரன்களைச் சேர்த்தது. 550 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. ஆனால் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய திமித் 97 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஸ்வின் மற்றும் ஜடேஜா தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். கடைசி இரு பேட்ஸ் மேன்கள் காயம் காரணத்தால் விளையாட முடியாமல் போனதால் இலங்கை 245 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டிக்ளர் செய்து கொண்டது. இதனால் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். வெளியூர் மைதானங்களில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சினை மிஞ்சி முதலிடம் பெற்றார் விராட். சச்சின் 19 போட்டிகளில் படத்தை சாதனையை 17 போட்டிகளில் பெற்றுள்ளார் விராட் கோலி. அதுமட்டுமின்றி கடந்த 12மாதங்களில் 5 முறை 600 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, கடந்த வருடத்தில் அதிகமுறை 600 ரன்களை சேர்த்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருமுறை 600 ரன்களைக் கடந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக