அமித்ஷா மனுதாக்கல்!
குஜராத் மாநிலத்தில் இருந்து பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் இன்று ஜூலை 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 மாநிலங்களவை உறுப்பினர்களில், மூன்று பாஜக எம்.பி.க்களும், ஒரு காங்கிரஸ் எம்.பி.யுமாக மொத்தம் நான்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதையடுத்து, காலியாகும் மக்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மூன்று காலி இடங்களிலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான பாஜகவின் பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது
அந்தக் கூட்டத்தில், அகமதாபாத் நானாபுரா தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி ராணி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதையடுத்து, அவர்கள் மூன்று பெரும் இன்று ஜூலை 28-ம் தேதி தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். மனுதாக்கலின் போது குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானியும் உடனிருந்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் மத்திய அமைச்சரவைக்கு தேர்தெடுக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக