எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பதித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அணியினராலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(ஜூலை 26-ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் தமிழக முதல்வராகப் பதவிவகித்தபோது, கடந்த ஜனவரி 5-ஆம் தேதியன்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன்.

மத்திய அரசு எனது வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியுள்ளது. எனவே, எம்.ஜி.ஆர்-ன் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here