இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தடுப்பு மருந்துகளுக்கான போதிய குளிர்சாதன வசதிகள் இல்லையென்று கம்ப்ட்ரோல்லர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் தகவல் கூறுகிறது.
அருணாச்சலப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தடுப்பு மருந்துகளுக்கான போதிய வசதி இல்லை என்று கம்ப்ட்ரோல்லர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. தடுப்பூசிகளை உரிய வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் ஆழ் உறைவிப்பான்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளும் இல்லையென்று இத்தகவல் கூறுகிறது.
இந்த அறிக்கையின் தகவலின்படி, அசாம் மாநிலத்தில், 30 ஆரம்ப சுகாதார மையங்களில் 11 மையங்களில் தடுப்பு மருந்துகளை தேவையான வெப்பநிலையில் பாதுகாக்க உதவும் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லை. அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் நான்கு மாவட்ட சுகாதார மையங்களிலும், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 11 ஆரம்பநிலை சுகாதார நிலையங்களிலும் குளிர்சாதன இயந்திரங்கள் இல்லை. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில், 12-ல் நான்கு ஆரம்பநிலை சுகாதார மையங்களில் குளிர்சாதன வசதிகள் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில், 28-ல் எட்டு சமுதாய சுகாதார மையங்களில் ஆழ் உறைவிப்பான்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லை. போதிய வசதிகள் இல்லையெனில் தடுப்பு மருந்துகளின் தன்மை மாறிப்போகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக