சமந்தாவிற்கு என்ன பிரச்சனை? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சமந்தாவிற்கு என்ன பிரச்சனை?


பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் சமந்தா.

அவர் படப்பிடிப்பிற்கு வந்த இரண்டாம் நாளே இயக்குநர் பொன்ராமை அழைத்து சில கண்டிஷன்களை போட்டுள்ளார். நீண்டகாலமாகவே சருமநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருபவர் சமந்தா. சோரியாஸிஸ் என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இதற்காக பல வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும், அவருக்கு சருமநோய் இன்னும் குணமாகவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள சோரியாஸிஸ் என்ற நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மட்டுமே முடியும். இதற்கான சிகிச்சையைத்தான் சமந்தா எடுத்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் ஷங்கரின் `ஐ', மணிரத்னத்தின் `கடல்' என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவை தேடி வந்தது. அந்த படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட சமந்தா பின்னர் இந்த சருமநோய் பிரச்சனை காரணமாக இரண்டு படங்களிலிருந்தும் விலகினார். இப்படியொரு சூழலில்தான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க தென்காசிக்கு வந்திறங்கியுள்ளார்.

இதனால், வெயிலில் நின்று என்னால் நடிக்க முடியாது. வெயில் அதிகமாவதற்கு முன் என்னுடைய ஷாட்களை எடுத்துவிட வேண்டும். வெயில் குறைந்த பிறகுதான் நடிக்க வருவேன், வெயில் நேரடியாக என் மீது படாத அளவுக்கு துணியைக் கட்டி படப்பிடிப்பு நடத்த வேண்டும் இது தான் சமந்தா போட்டுள்ள கண்டிஷன்கள்.

சமந்தாவின் காட்சிகளை மட்டும் எடுப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் வெயில் வந்த பின்னர் அவரோடு காட்சியில் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்களின் கால்ஷீட் விரயமாகும் இதனால் தயாரிப்பு செலவு அதிகரிக்கும். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கிறார். எனவே இந்த பிரச்சனையில் அவரது ரியாக்‌ஷன் என்ன என்பது தான் இப்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here