இந்திய குடிமைப்பணி தேர்வு, வனத்துறை தேர்வு, கமாண்டோக்களுக்கான தேர்வு ஆகியவற்றில் அதிக அளவு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் மனித நேய அறக்கட்டளையின் நோக்கமே… அதிகார வர்க்கத்தில் சமூக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதுதான்.
மனித நேயத்தின் மகத்தான சாதனையை எளிதாக புரிய வைக்க ஓர் உதாரணம் சொல்லலாம்.
நமது முந்தைய தலைமுறை வாழ்வில் பெரும்பான்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களை இணையத்தில் தேடிப் பாருங்கள். அபிஷேக் மிஸ்ரா, விஸ்வேஷ், தீபக் என்பன போன்றவையாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகான தலைமுறையில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கலெக்டர்களின் பட்டியலையோ, அதிகாரிகளின் பட்டியலையோ எடுத்துப் பாருங்கள். சின்னக்காளை, வீரையன், காத்தமுத்து போன்ற பல பெயர்கள் இருக்கும்.
இவை வெறும் பெயர் மாற்றம் அல்ல… வாய்ப்பு கிடைக்கப்பெறாத அல்லது வாய்ப்புகளில் இருந்து வெகுதூரம் தள்ளி வைக்கப்பட்ட சமுதாயத்தின் பெரும்பகுதி அதிகார மட்டங்களை நோக்கி முன்னேறியிருக்கிறது என்பதுதான் இந்த பெயர் மாற்றங்கள் சொல்லும் உன்னதமான செய்தி.
இந்த சமூக நீதிச் சமரில் மனித நேய அறக்கட்டளை பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது என்பதை தமிழ்நாட்டின் கல்வி, சமூக, பொருளாதார சூழல் அறிந்த எவரும் மறுத்துவிட மாட்டார்கள்.
தனித்திறன் படைத்த மாணவர்கள் தகுதி இருந்தும் திறமை இருந்தும் இப்படிப்பட்ட படிப்புகளை படிக்க வாய்ப்பில்லாத கிராமப்புற மாணவர்கள் விளிம்பு நிலை மக்கள் இதுபோன்ற உயர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவே மனித நேய அறக்கட்டளை இயங்கி வருகிறது. போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் நாட்டின் கடைக் கோடி மனிதன் அந்த தேர்வில் பங்கேற்று அரசமைப்பின் உயர் பீடங்களில் அலங்கரித்து மக்களுக்கான ஜனநாயக சேவையில் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பதே மனித நேய அறக்கட்டளை யின் மைய நோக்கம்.
அடுத்ததாக பெண்கள்… சமூகத்தின் எந்த பிரிவில் இருந்தாலும் பெண்கள் ஒரு படி கீழாகவே கருதப்பட்டு வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை என்ன தெரியுமா?
மனித நேய அறக்கட்டளை ஆரம்பித்ததற்குப் பிறகு பெண்கள் உயர் பதவிக்கு செல்லும் சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சாதனையிலும் மனித நேய அறக்கட்டளைக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது.
மனிதநேய அறக்கட்டளையின் இத்தகைய வெற்றிகளுக்கு காரணம் என்ன என்று ஒரு செய்தி நிறுவனம்… திரு. சைதை துரைசாமி அவர்களை பேட்டி கண்டது.
அந்த பேட்டியின் காணொளி கூட இன்றும் யு டீயூபில் உலவிக் கொண்டிருக்கிறது.
அதாவது சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பத்தையும் பாசிட்டிவ் ஆக மாற்றிக் காட்டும் துடிப்பும், துணிவும் இருக்கிறது. ஆம்… மனித நேய அறக்கட்டளையில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு என்று பல நிபுணர்கள் இருக்கிறார்கள்.
போட்டித் தேர்வுகளில் வென்று பல உயர்பதவிகளில் இருப்பவர்கள் வந்து மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள்.
அதேநேரம்… போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் மாணவர்களுக்கு வந்து வகுப்பெடுக்கிறார்கள். இங்கேதான் திரு. சைதை துரைசாமி அவர்களின் சாமர்த்தியமும், சமயோசிதமும் இருக்கிறது.
வெற்றி பெற்றவர்கள் வந்து வகுப்பெடுக்கும்போது எப்படி வெற்றி பெற்றோம் என்றெல்லாம் விளக்குவார்கள். அப்போது மாணவர்களுக்கு அதுபற்றிய பெருமிதம் உண்டாகும். ஆனால் போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றவர்களும் கடுமையாக உழைத்திருப்பார்கள்., வென்றவர்களுக்கு நிகராக உழைத்தவர்கள்தான் அவர்கள். ஆனாலும் ஏதேனும் ஒரு புள்ளியில் குறிப்பிட்ட விஷயத்தை தவறவிட்டிருப்பார்கள்.
அவர்களைக் கொண்டுவந்து வகுப்பெடுக்க வைக்கும்போது…. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த வகையில் எல்லாம் தவறு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும், அதை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதையும் உணர மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எதனால் வெற்றி பெற்றார்கள் என்பதை விட… எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள் என்பதுதான் மாணவர்களுக்கு முக்கியமான தேவை. அவர்களுக்கு ஓர் அனுபவம் இருக்கும். தாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை அவர்கள் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த தவறை செய்யக் கூடாது என்ற எண்ணம் மாணவர்களிடம் ஆழமாக பதியும்.
திரு.சைதை துரைசாமி அவர்களின் இந்த உத்தி… மனித நேயத்தின் வெற்றிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாது, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் மனித நேய அறக்கட்டளை தன் சேவைச் சிறகுகளை விரிக்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்புகிறார்கள்.
மனித நேய அறக்கட்டளையின் ஒவ்வொரு உத்தியும் நேர்மையும், வாய்மையும், உழைப்பும், பயிற்சியும் அடிப்படையாகக் கொண்டது.
தினமும் காலையில் வாசிக்கும் செய்தித் தாளுக்குள் உன் ஐ.ஏ.எஸ். கனவு அடங்கியிருக்கிறது என்பார் மனித நேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி.
கருத்துகளைத் தெரிவிக்க... manidhanaeyam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக