நீட் தேர்வு, கதிராமங்கலம் உள்ளிட்டப் பிரச்னைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று(ஜூலை 24-ஆம் தேதி) சந்தித்தார்.
முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏ.செம்மலை, மனோஜ்பாண்டியன் ஆகியோர் இன்று(ஜூலை 24-ஆம் தேதி) காலை டெல்லி சென்றனர். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஒ.என்.ஜி.சி. திட்டம் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதி மக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே போல் தமிழக அமைச்சர்கள், தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக நேற்றுஜூலை 24-ஆம் தேதி) காலை டெல்லி சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக