இறுதியாக CPSஐ நீக்கும் வரை போராட்டம் ஓயாது :JACTTO-GEO தீர்மானம் ** - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இறுதியாக CPSஐ நீக்கும் வரை போராட்டம் ஓயாது :JACTTO-GEO தீர்மானம் **

*இறுதியாக CPS-ஐ நீக்கும் வரை போராட்டம் ஓயாது : JACTTO-GEO தீர்மானம்.*

இன்று சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக் குழு கூட்டத்தில் அடுத்த கட்ட அதிரடிப் போராட்ட அறிவிப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக *CPS-ஐ நீக்கும் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களைத் தொடர்வது என்றும் தீர்மானம்* நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இத்தீர்க்கமான தீர்மானத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மோசஸ் முன்மொழிந்தார்.

*JACTTO-GEO-வின் அடுத்தகட்ட நகர்வுகள் :*

26.07.2017 :
மாவட்ட ஆயத்தக் கூட்டம்

05.08.2017 :
சென்னை கோட்டை நோக்கிப் பேரணி

06.08.2017 :
மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம்

22.08.2017 :
ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

26 & 27.08.2017 :
வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள்

07.09.2017 :
காலவரையற்ற வேலை நிறுத்தம்

இன்று முற்பகல் நடைபெற்ற ஜேக்டோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாக *ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்டுள்ளவை :*

1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது, ஏற்காவிடில் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.

2. ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் TNPSC தேர்வு, முதல் நாள் பேரணிக்குத் தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC தேர்வுப் பணியினைப் புறக்கணிப்பது.

3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் தவிர எந்த  ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது.

4. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாநில ஜேக்டோ ஜியோ சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும்.

5. ஆகஸ்ட் 5 பேரணியில் சென்னையில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும

6. ஜேக்டோ ஜியோ ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும்போது ஒருங்கிணைப்பாளர் தவிர ஜேக்டோ சார்பில் இருவர்,  மற்றும் ஜியோ சார்பில் இருவர் தலைமையில் நடைபெற வேண்டும்.

7. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அக்குழுவில் ஜேக்டோ 22 சங்கப் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

8. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாவட்ட ஜேக்டோ அல்லது ஒன்றிய ஜேக்டோ அல்லது மாவட்ட ஜேக்டோ ஜியோ மூலம் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

9. மாநில ஜேக்டோ ஜியோ  போராட்ட நிதியாக 22 ஜேக்டோ பிரதிநிதிகள் தலா ரூ.5000 வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here