ஒரு மாணவர்கூட சேராத 25% பொறியியல் கல்லூரிகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒரு மாணவர்கூட சேராத 25% பொறியியல் கல்லூரிகள்!


அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 25 சதவிகித தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது தெரிவியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு பொறியியல் கல்லூரிகள் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் மொத்தம் 565 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தனியார் பொறியியல் கல்லூரிகள் 527 கல்லூரிகள்.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பு படித்தவர்கள் வட்டாரத்துக்கு 10 பேர் இருந்தாலே பெரிய காரியம். 2005ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல உருவாகி 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரை அதிகரித்து செயல்பட்டுவந்தன. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான மாணவர்கள் பொறியியல் படித்ததாலும், பொறியியல் கல்வியின் தரம் குறைந்ததாலும், உலகப் பொருளாதார மந்த நிலையாலும் பொறியியல் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. இதனால், அடுத்து வந்த ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பதில் ஆர்வம் காட்டாமல் கலை அறிவியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து படிக்கத் தொடங்கினார்கள். இதனால், சில கல்லூரிகள் மானவர்கள் சேர்க்கை இல்லாததாலும், கல்லூரிகளை நடத்த நிதி ஆதாரம் போதாமையாலும் தங்கள் கல்லூரிகளை மூடுவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் விண்ணப்பித்தன. அதன்படி இதுவரை 33 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் 2017 -18ம் கல்வியாண்டுகான பொறியியல் படிப்பு மாணவர் கலந்தாய்வு கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு தொடங்கி 10வது நாளாக நடைபெற்று வருகையில், பெரும்பாலான அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், 527 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 39 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 75 சதவிகித அளவுக்கு இடங்கள் மாணவர்கள் சேர்ந்து இடத்தை நிரப்பியுள்ளனர். இதில் 25 சதவிகித தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை என்பது துரதிருஷ்டவசமாக உள்ளது.

கடந்த 2016 -17ம் கல்வியாண்டில் 1.18 லட்சம் பொறியியல் படிப்பு சீட்டுகள் மாணவர்கள் யாரும் சேராமல் காலியாக இருந்தது. இதனால், இந்த ஆண்டும் தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் சீட்டுக்கு மேல் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here