இந்திய ரானுவம் சீன எல்லைக்குள் ஊடுருவியதா ? ..? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்திய ரானுவம் சீன எல்லைக்குள் ஊடுருவியதா ? ..?


இந்திய, சீன எல்லையில் எந்த ஊடுருவலையும் தடுப்பதற்கு சீன ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகச் சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின், சிக்கிம் மாநிலம் அருகே லேக்டாம் பகுதியில் இந்திய, சீன எல்லைக்கோடு பகுதியில் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளதாகச் சீன அரசு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில், சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு தினம் இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவமான சீன ராணுவத்தின் ஆண்டு விழாவையொட்டி, சீனாவின் ராணுவ பலத்தை பொதுமக்களுக்குக் காட்டும் வகையில் நேற்று ஜூலை 31ஆம் தேதி தலைநகர் பெய்ஜிங்-கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அதிபர் ஜி ஜிங்பிங் பேசுகையில்:- சீனாவின் எல்லைப்பகுதிக்குள் அந்நியர்கள் யாரையும், எக்காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சீன மக்கள் எப்போதும் அமைதியை நேசிப்பவர்கள். நாங்கள் ஒருபோதும் துவேசத்தை விரும்ப மாட்டோம். புத்தர் பிரான் கூறிய அமைதிக்கு ஒருபோதும் பங்கம் விளைவிக்கச் சீன அரசு அனுமதிக்காது. அது நாட்டின் குடிமகனாக இருந்தாலும் சரி, அந்நியர்களாக இருந்தாலும் சரி அதை அனுமதிக்க மாட்டோம்.

அதேபோல், எத்தகைய ஊடுருவலையும் தடுக்கும் வல்லமை சீனாவுக்கு உண்டு என்பதை நாங்கள் உலக நாடுகளுக்குத் தெரிவித்து கொள்கிறோம். எங்களின் இறையாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சீன எல்லையில் ஊடுருபவர்களிடம் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்று அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here