பட்டாசு தயாரிப்பில் கட்டுப்பாடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்டாசு தயாரிப்பில் கட்டுப்பாடு!


சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் 5 உலோகங்களைப் பட்டாசு தயாரிப்பின்போது பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் பட்டாசு வெடிப்பதன் காரணமாக அதிக மாசு ஏற்படுவதால் கூறப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகையின்போது மாசு ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. எனவே பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றமும் டெல்லியில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், பட்டாசுகளைக் கையிருப்பில் வைப்பதற்கும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்தது.

இதற்கிடையே பட்டாசுகளில் அதிக அளவில் கந்தகம் சேர்க்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தனது பதில் மனுவில் தெரிவித்திருந்து. இந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூலை 31) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஏ.பி.அபோல்கர், ‘பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறித்த தரநிர்ணய விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. செப்டம்பர் 15 ம் தேதிக்குள் இப்பணி முடிவடையும்’ என்று தெரிவித்தார்.

அதையடுத்து, நீதிபதிகள்,” பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய உலோகங்களான காரீயம், பாதரசம், லித்தியம், ஆர்சனிக், ஆன்டிமோனி ஆகியவற்றால், மிகப்பெரிய அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. ஆகவே, பட்டாசு தயாரிப்பில் மேற்கண்ட 5 உலோகங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பிரதிவாதிகள் உற்பத்தி செய்யும் பட்டாசுகளில் இந்த உலோகங்கள் எந்த வகையிலும் இடம்பெறக்கூடாது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பு ஆகும்” என்று உத்தரவிட்டனர். மேலும் அடுத்தகட்ட விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைய தினம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஏ.பி.அபோல்கர், சிவகாசியில் உள்ள வெடி பொருட்களுக்கான துணை தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி கே.சுந்தர்சன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here