✴சென்னையின் 3-வது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்பட துவங்கியது : விரைவில் தென்மாவட்ட ரயில்கள் இயக்கம்..!_*
தாம்பரம்: தலைநகர் சென்னையில் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. ரயில் முனையமாக மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று இரவு 9.45 மணிக்கு வாராந்திர விரைவு ரயிலான கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்றது. முதல் நாளிலேயே தாம்பரத்திலிருந்து பல பயணிகள் அந்த ரயிலில் பயணித்தனர். மேலும் தாம்பரம் ரயில் நிலையம், ரயில் முனையமாக செயல்படத் துவங்கியது மகிழ்ச்சியளிப்பதாகவும் பயணிகள் கூறினர்.ரயில் முனையமாக மாற்றப்பட்டுள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி வைக்க, ஸ்டே லைன்கள், பிட் லைன்கள், பெட்டியை தூய்மை படுத்துதல், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல படிக்கட்டுகள், லிப்ட், பேட்டரி கார் போன்ற வசதிகளையும் பயணிகளுக்காக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக தாம்பரம் ரயில் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் தென்மாவட்ட ரயில்கள் பல இங்கிருந்து இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக